அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான உறவில் இராணுவ எச்சரிக்கைகளும், இராஜதந்திர முயற்சியும் ஒரே நேரத்தில் தொடர்வதால் மத்திய கிழக்கில் ஒரு தெளிவற்ற சூழல் நிலவி வருவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
அமெரிக்கா தன் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்தால், அதற்குத் தக்க விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஈரானின் இராணுவமும் புரட்சிகரக் காவல்படையும் எச்சரித்துள்ளன.
அரசியல் தலைமையைப் பொறுத்தவரை, இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகளை முழுமையாக மூடாமலும், அதேவேளை முழுமையாகத் திறக்காமலும் கவனமான ஒரு நிலைப்பாட்டைக் கையாண்டு வருகிறது.
அமெரிக்காவுடனான எந்தவொரு பேச்சுவார்த்தை உடன்பாட்டிலும் தெஹ்ரானில் நிலவும் ஆழமான நம்பிக்கையின்மையே பெரும் தடையாக உள்ளது.
தற்போது தற்காலிகப் போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும், அது எந்த நேரத்திலும் முறியப்படக்கூடிய பலவீனமான சூழலிலேயே உள்ளது.
இரு தரப்பிற்கும் இடையே மீண்டும் ஒரு வலுவான மோதல் அலை உருவாகக்கூடும் என்ற அச்சம் நீடிக்கிறது.
இந்தநிலையில்,ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவித்தல், போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டுக் கோரிக்கைகள் போன்ற பிரச்சினைகள், இராஜதந்திரப் பாதையில் சுமுகமாகத் தீர்க்கப்படுமா அல்லது அடுத்தகட்ட மோதலுக்கு வழிவகுக்குமா என்பதை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.
Latest News
இலங்கை மெட்ரோ போக்குவரத்துத் திட்டம்: 104 புதிய பேருந்துகள் நாட்டுக்கு வருகை!
Local
29 July 2026
உச்சக்கட்ட எரிபொருள் நெருக்கடி - தவிக்கும் பாலஸ்தீன மக்கள்!
Local
29 July 2026
நள்ளிரவில் லிப்ஸ்டிக் போட்டதால் விவாகரத்து - நீதிமன்றம் சொன்ன அதிரடி பதில்!
Local
29 July 2026
ஓய்வு குறித்து நெய்மர் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!
Local
29 July 2026
எண்ணெய் விலையில் அதிரடி மாற்றம்
Local
29 July 2026
மாணவர்களின் ஊட்டச்சத்து தரத்தை உயர்த்த புதிய யோசனை: சத்துணவு பட்டியலில் சிக்கன் பிரியாணிக்கு வாய்ப்பு!
Local
29 July 2026
காஸா போர்: பெற்றோர்களை இழந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள்!
Local
29 July 2026
ஒரு கையுடன் போராடி சாதனை படைத்த சிறுமிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்ரன்
Local
29 July 2026
நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் புதிய திட்டம்!
Local
29 July 2026
தமிழ் மாணவிக்கு உதவிய சிங்கள இளைஞன் - நெகிழ்ச்சியான தருணம்
Local
29 July 2026