அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் இராணுவ மோதல்களை உடனடியாக நிறுத்திவிட்டு, இரு தரப்பும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்ப வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரெஸ் (Antonio Guterres) வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக நியூயோர்க்கில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த ஐ.நா.வின் துணைப் பேச்சாளர், "இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு முன்வராவிட்டால், இந்த மோதல் ஒரு பெரிய போராக விரிவடையும் என்று பொதுச்செயலாளர் நீண்ட காலமாகவே கவலை கொண்டிருந்தார்.
கடந்த சில மணிநேரங்களில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது, அந்த அச்சம் நிஜமாவது போலவே தோன்றுகிறது" எனக் குறிப்பிட்டார்.
கடந்த சில மணிநேரங்களில் நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது, அந்த அச்சம் நிஜமாவது போலவே தோன்றுகிறது" எனக் குறிப்பிட்டார்.
தற்போது அரங்கேறி வரும் வன்முறைச் சம்பவங்கள் எந்த விதத்திலும் நேர்மறையானவை அல்ல என்று சுட்டிக்காட்டிய அவர், இரு நாடுகளும் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என்பதில் பொதுச்செயலாளர் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தநிலையில் பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வரும் மத்தியஸ்த முயற்சிகளைப் பயன்படுத்தி, தூதரக வழிமுறைகள் மூலம் தீர்வுகாண முன்வர வேண்டும் என ஐ.நா. மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
Latest News
2030இல் இலங்கை எட்டப்போகும் இலக்கு - அரசாங்கத்தின் மெகா திட்டம்
Local
02 August 2026
தோனியுடன் தீவிர பயிற்சி - இலங்கைத் தொடருக்கு தயாராகும் ரிஷப் பண்ட்
Local
02 August 2026
இந்திய அணியின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் குறித்து வெளியான அறிவிப்பு!
Local
02 August 2026
சந்தேகத்திற்குரிய நபர்கள் எவருக்கும் தஞ்சமளிக்க வேண்டாம் - காவல்துறை வேண்டுகோள்
Local
01 August 2026
ஊரடங்கு குறித்து காவல்துறை பேச்சாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Local
01 August 2026
மஹர சிறைச்சாலையைச் சுற்றி வான்படை உலங்கு வானூர்தி, ட்ரோன்கள்!
Local
01 August 2026
ராகமவில் உடனடியாக அமுலுக்கு வந்தது காவல்துறை ஊரடங்கு
Local
01 August 2026
மஹர சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியே அமைதியின்மை
Local
01 August 2026
கடலில் விழுந்த 17 வெற்று கொள்கலன்கள் தெற்கு நோக்கி மிதக்கின்றன!
Local
01 August 2026
மஹர சிறைச்சாலை பதற்றம்: ஒருவர் பலி, 6 பேர் காயம் - கட்டடமொன்றில் தீ பரவல்!
Local
01 August 2026