இந்தியாவின் கர்நாடக மாநிலம் துமகூரு நகரிலுள்ள பிரபல நகையகமொன்றில், விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த 10 வைர மோதிரங்களும் 2 தங்கச் சங்கிலிகளும் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 10 லட்சம் இந்திய ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நகையகத்தின் பூட்டுகள் உடைக்கப்படாததுடன், நகையகத்துக்குள் யாரும் அத்துமீறி நுழைந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாததால், ஆரம்பத்தில் அதன் உரிமையாளர் ஊழியர்கள் மீது சந்தேகம் கொண்டிருந்தார்.
இதையடுத்து, நகையகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன.
அப்போது, இரவு நேரத்தில் அங்கு சுற்றித்திரிந்த எலி ஒன்று, வைர மோதிரங்களையும் தங்கச் சங்கிலிகளையும் ஒவ்வொன்றாக வாயில் கவ்விக்கொண்டு சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தமை தெரியவந்தது.
இதையடுத்து, மர அலுமாரிகளும் அவற்றின் பின்புறப் பகுதிகளும் முழுமையாக சோதனைக்குட்படுத்தப்பட்டன.
சுமார் 13 மணி நேர தேடுதலின் பின்னர், மரப் பலகையின் பின்புறத்தில் இருந்த துளையொன்றிலிருந்து காணாமல் போன அனைத்து நகைகளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட நகைகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்றும், அவற்றில் பொருத்தப்பட்டிருந்த விலைப் பட்டியல்கள் மட்டுமே சேதமடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட நகைகள் பாதுகாப்பாக மீளக் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாத வகையில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகையக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
Latest News
இந்தியாவில் 2 நாட்களில் ரூ. 100 கோடியைக் கடந்தது 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே'
Local
01 August 2026
அந்த தேவை இருவருக்கு இருந்தது; புலனாய்வுத் தகவல் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றார் மைத்ரி - தீர்ப்பின் பின்னர் ஹேமசிறி கருத்து
Local
01 August 2026
ரஜினிகாந்த் கொடுத்த பரிசு : ‘ஹோம்வொர்க்’ செய்யும் நடிகை ராஷி கண்ணா!
Local
01 August 2026
உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு இலங்கையில் தாய்ப்பால் வாரம் பிரகடனம்!
Local
01 August 2026
தொடருந்து திணைக்களத்தின் குறைபாடுகள் : உரிய தீர்வு வழங்காவிட்டால் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்!
Local
01 August 2026
இலங்கைக்கு அப்பால் கப்பலிலிருந்து 17 வெற்று சரக்குக் கொள்கலன்கள் கடலில் வீழ்ந்துள்ளன!
Local
01 August 2026
நீர்கொழும்பு கடலில் காணாமல் போன கடற்றொழிலாளர் உடலமாக மீட்பு : மேலும் 3 படகுகள் தேடப்படுகின்றன!
Local
01 August 2026
நீர்கொழும்பு கடலில் காணாமல் போன கடற்றொழிலாளர்களை மீட்கக் கூட்டு நடவடிக்கை
Local
01 August 2026
இங்கினியாகலவில் மின்னல் தாக்கியதில் வீடொன்று முற்றாக தீக்கிரை!
Local
01 August 2026
பேங்கொக்கிலிருந்து அனுப்பப்பட்ட ரூ. 10.6 கோடி பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்
Local
01 August 2026