General02 August 2026

தோனியுடன் தீவிர பயிற்சி - இலங்கைத் தொடருக்கு தயாராகும் ரிஷப் பண்ட்

இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குத் தயாராகும் வகையில், இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட், முன்னாள் இந்திய அணித்தலைவர் எம்.எஸ். தோனியுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

ராஞ்சியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் தோனியுடன் இணைந்து ரிஷப் பண்ட் பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட் முக்கிய வீரராக இடம்பெற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரில் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராக செயற்பட்ட பண்ட், 312 ஓட்டங்களை மட்டுமே பெற்று எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கத் தவறினார்.

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற, இந்தியா எஞ்சியுள்ள 9 டெஸ்ட் போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes