General02 August 2026

மஹர சிறைச்சாலையிலிருந்து பூஸா சிறைச்சாலைக்கு 20 கைதிகள் இடமாற்றம்!

மஹர சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்படிருந்த கைதிகளில் சுமார் 20 பேர் பூஸா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மஹர சிறைச்சாலையில் இருந்த மேலும் ஒரு குழுவைச் சேர்ந்த கைதிகள் பதுளை, வவுனியா மற்றும் வெலிக்கடை ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes