General02 August 2026

வசாவிளானில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்: இராணுவத்திடம் மனுவும் கையளிப்பு!

யாழ்ப்பாணம் - வசாவிளான் பகுதியில் 40 ஆண்டுகளாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் நிறைவில், வசாவிளான் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அதிகாரிகள் ஊடாக யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதிக்குக் கோரிக்கை அடங்கிய மனு ஒன்றையும் அவர்கள் கையளித்தனர்.

தமது நிலங்கள் மீள ஒப்படைக்கப்படும் வரை, இனிவரும் ஒவ்வொரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை முதல் மதியம் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகக் காணி உரிமையாளர்கள் இதன்போது அறிவித்துள்ளனர்.

இதேவேளை, தமது காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி பகுதி மக்களும், பலாலி பகுதி மக்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes