General03 August 2026

நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் 100 மி.மீக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன

குறிப்பாக மலையகப் பகுதிகள் மற்றும் நீர்மின் உற்பத்தி நிலையங்களைச் சூழவுள்ள பகுதிகளில் அதிக மழை பதிவாகியுள்ளது.

இந்த காலப்பகுதியில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக நுவரெலியா மாவட்டத்தின் கெனியொன் பகுதியில் 191 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது

அதேநேரம், நீர்மின் உற்பத்தி நிலையங்களைச் சூழவுள்ள பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது

லக்சபான: 187.0 மி.மீ

நோட்டன்: 186.0 மி.மீ

காசல்றீ 159.0 மி.மீ

மேல் கொத்மலை: 133.2 மி.மீ

கொத்மலை: 132.8 மி.மீ

மஸ்கெலியா: 96.0 மி.மீ

நீர்மின் நிலைய நீரேந்துப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களிலும் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. டிக்ஓயா பகுதியில் 127.0 மி.மீ, ஓல்டன் பகுதியில் 122.5 மி.மீ என மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது

மேலும், அம்பேவலை மற்றும் குடாஓயா ஆகிய இடங்களில் தலா 118.0 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes