இலங்கையில் உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் குறித்து சர்வதேச நீதிபதிகள் சங்கம் (IAJ) தனது பலத்த கவலையை வெளியிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய சர்வதேச நீதிபதிகள் அமைப்பான சர்வதேச நீதிபதிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவது பற்றிய கவலையை விட, இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்ட விதம், நேரம் மற்றும் இதன் பின்னணியில் உள்ள நோக்கம் குறித்தே கவலை கொள்வதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
நீதித்துறையைப் பாதிக்கும் அரசியலமைப்பு மாற்றங்கள், முறையான ஆலோசனைகள் மற்றும் வெளிப்படையான வழிமுறைகள் மூலமே கொண்டுவரப்பட வேண்டும்.
தன்னிச்சையாக கொண்டுவரப்படும் இத்தகைய அறிவிப்புகள் நீதித்துறை சுயாதீனத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திருத்தச் சட்டம் குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்குப் பலன் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவே பரவலாகப் பார்க்கப்படுவதாகவும், இது நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என்றும் சர்வதேச நீதிபதிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை நீதித்துறை சேவை சங்கம் மற்றும் பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் ஆகிய அமைப்புகளின் கவலைகளையும் தாம் பகிர்ந்துகொள்வதாகக் குறிப்பிட்டுள்ள சர்வதேச நீதிபதிகள் சங்கம், இந்தச் சட்டமூலத்தை தற்போதைய வடிவில் மீளாய்வு செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.
1953-இல் ஒஸ்திரியாவில் தொடங்கப்பட்ட சர்வதேச நீதிபதிகள் சங்கம், 93 நாடுகளின் நீதிபதிகள் சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி சர்வதேச அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
ஆகஸ்ட் மாதத்தில் லிட்ரோ எரிவாயு கொள்கலன் விலையில் மாற்றமில்லை
Local
06 August 2026
"இந்த ஜென்மத்திற்கு விடை பெறுகிறேன்" : 'சீதா ராமம்' திரைப்படம் குறித்து வெளியாகியுள்ள நெகிழ்ச்சி தகவல்!
Local
06 August 2026
நெடுந்தீவு கடற்பரப்பில் படகு விபத்து - 11 இந்திய கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்பு
Local
06 August 2026
2.5 மில்லியன் டொலர் சைபர் திருட்டு : 5 நாடுகளிடம் இலங்கை சட்ட உதவி கோரிக்கை
Local
06 August 2026
கடும் மழையின் எதிரொலி: ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் ஒரு பகுதி தாழிறங்கும் அபாயம்
Local
06 August 2026
யூடியூபர் சவுக்கு சங்கரின் மகன் உயிரிழப்பு – காவல்துறை விசாரணை தீவிரம்!
Local
06 August 2026
சுவிட்ஸர்லாந்தில் பரவும் நோய் : ஒருவர் பலி - 28 பேர் பாதிப்பு!
Local
06 August 2026
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளை நிறைவு
Local
06 August 2026
மக்கள் பிரதிநிதிகளின்சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்த சட்டத் திருத்தம் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு
Local
06 August 2026
சைபர் பாதுகாப்பு சோதனையில் அதிர்ச்சி: AIக்கு இணைய அணுகல் கிடைத்தால் என்ன நடக்கும்? மெட்டா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Local
06 August 2026