இலங்கையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியா வழங்கிய 'மெலத்தியன்' (Technical Malathion) பூச்சிக்கொல்லி மருந்துத் தொகுதி, சுகாதார அமைச்சிடம் இன்று (4) உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha), இந்த மருந்துத் தொகுதியை சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் கையளித்தார்.
பொது சுகாதார பரிசோதகர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த மெலத்தியன் மருந்தினை வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக இந்திய உயர்ஸ்தானிகருக்கு சுகாதார அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இலங்கையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இத்தகைய 'தொழில்நுட்ப மெலத்தியான்' மருந்து பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர கருத்துத் தெரிவிக்கையில், "தற்போது டெங்கு பரவலின் வேகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
இவ்வாறான சூழ்நிலையில் இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள இந்த மெலத்தியன் மருந்துத் தொகுதி, டெங்குவை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்குப் பெரும் உதவியாகவும் அமையும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் பங்களிப்பும் ஆர்வமும் எப்போதும் இல்லாதவாறு தற்போது கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest News
சுவிட்ஸர்லாந்தில் பரவும் நோய் : ஒருவர் பலி - 28 பேர் பாதிப்பு!
Local
06 August 2026
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மூன்றாம் தவணை முதல் கட்டம் நாளை நிறைவு
Local
06 August 2026
மக்கள் பிரதிநிதிகளின்சொத்து விபரங்களை பகிரங்கப்படுத்த சட்டத் திருத்தம் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு
Local
06 August 2026
சைபர் பாதுகாப்பு சோதனையில் அதிர்ச்சி: AIக்கு இணைய அணுகல் கிடைத்தால் என்ன நடக்கும்? மெட்டா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
Local
06 August 2026
சாகிப் அல் ஹசனின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு
Local
06 August 2026
இலங்கை தேயிலைக்கு பலத்த வரவேற்பு - ஜூலை ஏலத்தில் விலை அதிரடியாக அதிகரிப்பு
Local
06 August 2026
தங்கப் பிரியர்களுக்கு அதிர்ச்சி : இன்று மீண்டும் அதிகரித்தது தங்க விலை!
Local
06 August 2026
பல்கலைக்கழக சேர்க்கைக்கான பதிவுகள் ஆரம்பம் - மேன்முறையீடுகளுக்கு ஆகஸ்ட் 21ஆம் திகதி வரை அவகாசம்
Local
06 August 2026
திருகோணமலையில் குளவிக் கொட்டு: 30 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
Local
06 August 2026
குடியிருப்புகளின் பாதுகாப்பிற்கு 'ரோபோட் நாய்கள்' அறிமுகம் : குற்றத் தடுப்பில் புதிய தொழில்நுட்ப முயற்சி!
Local
06 August 2026