General05 August 2026

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் மீண்டும் திறப்பு: மகாவலி கங்கையை அண்மித்த மக்களுக்கு எச்சரிக்கை!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (05) மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, வினாடிக்கு சுமார் 130 கன அடி நீர் மகாவலி கங்கைக்கு திறந்து விடப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நீர் திறந்து விடப்படுவதன் காரணமாக மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால், உலப்பனை, கெடிஓயா, கம்பளை, பேராதனை மற்றும் கட்டுக்கஸ்தோட்டை ஆகிய பகுதிகளில் மகாவலி கங்கையின் இருமருங்கிலும் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes