General05 August 2026

தனிப்பட்ட முறுகல் காரணமாகப் பேருந்துக்குத் தீவைப்பா? கடுவலையில் பரபரப்பு!

கடுவலை பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பிரதான வாராந்த சந்தை பகுதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த அதிநவீன சொகுசு பேருந்து ஒன்றுக்கு, உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவர் இன்று (05) அதிகாலை தீவைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு தீவைக்கப்பட்டிருப்பது, அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கடுவலை - மாத்தறை இடையே சேவையில் ஈடுபடுத்தப்பட்ட சொகுசு பேருந்தாகும்.

தீப்பரவல் காரணமாக அந்தப் பேருந்து முற்றிலும் சேதமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தப் பேருந்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவலை - கொள்ளுப்பிட்டி சாதாரண சேவைப் பேருந்துகள் இரண்டுக்கும் தீயினால் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

தனிப்பட்ட தகராறு காரணமாகவே இந்தத் தீவைப்புச் சம்பவம் நடந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
Related recommendation
Hiru TV News | Programmes