General05 August 2026

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் - ஜனாதிபதி சந்திப்பு: 350 மில்லியன் டொலர் இந்திய கடன் ஒப்பந்தம் கைச்சாத்து

இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து, ‘டிட்வா’ அனர்த்தத்தின் பின்னர் இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மறுசீரமைப்பு உதவியின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்திய ரூபாய் கடனுதவி தொடர்பான ஒப்பந்தங்கள் இருதரப்பினராலும் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவின் உதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes