லங்கா மெட்ரோ ட்ரான்சிட் நிறுவனம், 799 ரூபாய் என்ற ஒற்றைக் கட்டணத்தில் வாரஇறுதி நாட்கள் முழுவதும் மெட்ரோ பேருந்து சேவையில் வரம்பற்ற பயணத்தை அனுபவிக்கும் வகையில் வாரஇறுதி அனுமதிச்சீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
நண்பர்களைச் சந்திக்கச் செல்வது, பல்கலைக்கழகங்களுக்கு பயணிப்பது, நகரத்தை வலம் வருவது அல்லது குடும்பத்துடன் வெளியூர்களுக்குச் செல்வது என வாரஇறுதிப் பயணங்களுக்குப் பயணிகளுக்கு அதிக வசதியையும் நெகிழ்வுத்தன்மையையும் வழங்கும் வகையில் இந்த அனுமதிச்சீட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாக லங்கா மெட்ரோ ட்ரான்சிட் தெரிவித்தது.
இந்த வாரஇறுதி அனுமதிச்சீட்டு சனிக்கிழமை நள்ளிரவு 12:00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11:59 மணி வரை செல்லுபடியாகும்.
இந்த இரண்டு நாள் காலப்பகுதியில் மெட்ரோ பேருந்து சேவைகளில் வரம்பற்ற முறையில் பயணிக்க முடியும்.
அத்துடன், இந்த சலுகையின் கீழ் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இலவசமாகப் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரஇறுதி அனுமதிச்சீட்டை 'LMT GO' (App) மூலம் மட்டுமே பிரத்யேகமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
பல்லேகலை – தும்பர போகம்பர சிறைச்சாலை பகுதியில் பலத்த பாதுகாப்பு
Local
07 August 2026
நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தில் இணையும் நடிகை ஸ்ரீலீலா
Local
07 August 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கப் பிரேரணை!
Local
07 August 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது: மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு
Local
07 August 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம்
Local
07 August 2026
சிறைச்சாலை மோதல்கள் - ஜனாதிபதி தலைமையில் விசேட சந்திப்பு
Local
07 August 2026
தனது லயோலா கல்லூரி சிரேஷ்ட மாணவர், தனது வகுப்பு மாணவரைக் கைது செய்வார் என கனவில் கூட நினைக்கவில்லை
Local
07 August 2026
இரண்டு நிமிடம் மௌனமான தமிழக சட்டமன்றம் - மறைந்த பிரபலங்களுக்கு மரியாதை!
Local
07 August 2026
சிறைச்சாலைப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் - சஜித் வலியுறுத்தல்!
Local
07 August 2026
பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் கண்ணீர் புகை பிரயோகம்
Local
07 August 2026