General07 August 2026

ரவி செனவிரத்னவிற்கு எதிரான வழக்குக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது மேல் நீதிமன்றம்!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எதிராக கல்கிசை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வாகன விபத்து தொடர்பான வழக்கின் மேலதிக நடவடிக்கைகளை இடைநிறுத்தும் வகையில், கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரவி செனவிரத்ன தாக்கல் செய்திருந்த மீளாய்வு மனுவை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து சம்பவம் தொடர்பில் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விபத்தைத் தடுக்கத் தவறியமை, கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ரவி செனவிரத்னவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில், விபத்தைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டை அவர் முன்னதாக ஏற்றுக்கொண்டதையடுத்து, கல்கிசை நீதவான் நீதிமன்றம் அவருக்கு 2,500 ரூபா அபராதம் விதித்திருந்தது.

மீதமுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் பின்னர் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவற்றை தொடர்ந்து முன்னெடுப்பதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes