பிரதம நீதியரசர் மற்றும் காவல்துறை மாஅதிபரின் உத்தியோகபூர்வ இல்லங்களைச் சுற்றியுள்ள வீதிகளை காணொளி பதிவு செய்ததாகக் கூறப்படும் 40 வயதான சந்தேகநபர் ஒருவர் கறுவாத்தோட்டம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கையடக்க தொலைபேசியையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சொகுசு வாகனமொன்றில் சென்ற சந்தேகநபர், காவல்துறை மாஅதிபரின் உத்தியோகபூர்வ இல்ல நுழைவாயிலுக்கு அருகில் காணொளி பதிவு செய்து கொண்டிருந்ததை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவர் அவதானித்துள்ளார்.
இதையடுத்து, அவர் அப்பகுதியில் கடமையில் இருந்த போக்குவரத்து காவல்துறை உத்தியோகத்தருக்கு தகவல் வழங்கியதையடுத்து, கொழும்பு அவசரப் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்துக்குச் சென்ற கறுவாத்தோட்டம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரின் கைப்பேசியை ஆரம்பகட்டமாக பரிசோதித்தபோது, காவல்துறை மாஅதிபரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகள், அதேபோல் பிரதம நீதியரசரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் தொடர்பான காணொளிகள் பதிவாகியிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப விசாரணையின்போது, காணொளிகளை பொழுதுபோக்காக பதிவு செய்ததாக சந்தேகநபர் தெரிவித்திருந்தாலும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் தனது வசிப்பிடம் உள்ளிட்ட சில விடயங்களில் முரண்பாடான தகவல்களை வழங்கியதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் அலுபொமுல்லை, அறுகொட பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Latest News
ஹாய் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? – வெளியீட்டு திகதி குறித்து குழப்பம்
Local
07 August 2026
பல்லேகலை – தும்பர போகம்பர சிறைச்சாலை பகுதியில் பலத்த பாதுகாப்பு
Local
07 August 2026
நடிகர் ரஜினிகாந்தின் புதிய திரைப்படத்தில் இணையும் நடிகை ஸ்ரீலீலா
Local
07 August 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கப் பிரேரணை!
Local
07 August 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு முடிவுக்கு வந்தது: மனுவை மீளப் பெறுவதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு
Local
07 August 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை மறுதினம்
Local
07 August 2026
சிறைச்சாலை மோதல்கள் - ஜனாதிபதி தலைமையில் விசேட சந்திப்பு
Local
07 August 2026
தனது லயோலா கல்லூரி சிரேஷ்ட மாணவர், தனது வகுப்பு மாணவரைக் கைது செய்வார் என கனவில் கூட நினைக்கவில்லை
Local
07 August 2026
இரண்டு நிமிடம் மௌனமான தமிழக சட்டமன்றம் - மறைந்த பிரபலங்களுக்கு மரியாதை!
Local
07 August 2026
சிறைச்சாலைப் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்க வேண்டும் - சஜித் வலியுறுத்தல்!
Local
07 August 2026