நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சபரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், வடமேல் மாகாணத்தில் அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய, சபரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு: கஞ்சிபான இம்ரானின் உறவினர் என தகவல்!
Local
10 August 2026
‘டேர்டெவில்’ திரைப்படத்தின் கதை இப்படி தான் இருக்கும்: மனம் திறந்த ஆதிக் ரவிச்சந்திரன்
Local
10 August 2026
சம்பளத்தில் மட்டுமல்ல... செல்வாக்கிலும் முன்னணியிலுள்ள நடிகைகளின் பட்டியல் வெளியீடு!
Local
10 August 2026
சுரேஷ் சலேயின் மனு தொடர்பான இடையீட்டு மனுக்கள் மீதான பரீசிலனை ஒத்திவைப்பு
Local
10 August 2026
துறைமுக நகரில் குடியேறுவோருக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை: எஸ்.எம். மரிக்கார் எச்சரிக்கை
Local
10 August 2026
சந்திக ஹதுருசிங்கவுக்கு 164,000 அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்கியது ஸ்ரீலங்கா கிரிக்கெட்
Local
10 August 2026
அன்று சூர்யாவைப் பார்க்க முடியாத ஏக்கம்... இன்று அவருக்கே ஜோடி! - மமிதா பைஜு கூறிய நெகிழ்ச்சிச் சம்பவம்!
Local
10 August 2026
சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கம்!
Local
10 August 2026
ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறும் அதிசய மீன் : வியக்க வைக்கும் தகவல்
Local
10 August 2026
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது
Local
10 August 2026