லங்கா சதொச நிறுவனம் 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பதாக தெரிவித்துள்ளது.
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைக்கப்பட்ட புதிய விலைகளின் படி வெள்ளைப்பூண்டு ரூ.649 ஆகவும் (ரூ.50 குறைப்பு) , பெரிய வெங்காயம் ரூ.224 ஆகவும் (ரூ.35 குறைப்பு) , உருளைக்கிழங்கு ரூ.239 ஆகவும் (ரூ.20 குறைப்பு), நிலக்கடலை ரூ.869 ஆகவும் (ரூ.10 குறைப்பு), வெள்ளை பச்சை அரிசி ரூ.187 ஆகவும் (ரூ. 9 குறைப்பு) குறைக்கப்படடுள்ளது.
அத்துடன் பயறு ரூ. 844 ஆகவும் (ரூ.5 குறைப்பு) ,சிவப்பு பச்சை அரிசி ரூ. 169 ஆகவும் (ரூ.4 குறைப்பு) , வெள்ளை நாடு அரிசி (உள்ளூர்) ரூ.197 ஆகவும் (ரூ.2 குறைப்பு) , கடலை ரூ. 327 ஆகவும் (ரூ.2 குறைப்பு) , உழுந்து ரூ.864 ஆகவும் (ரூ.1 குறைப்பு) குறைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வாடிக்கையாளர்கள் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.
திருத்தப்பட்ட விலைகள் குறித்த தகவல்களை உள்ளடக்கிய உத்தியோகபூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
Latest News
14 மாதங்கள் வீட்டில் இருந்தேன்: வருங்கால மனைவிதான் காரணம் – கடினமான காலம் குறித்து மனம் திறந்த விஷால்
Local
08 August 2026
"நாய்க்கு நாய்னு பேரு வச்சது யாருடா?" இணையவாசிகளை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் AI அனிமேஷன் காணொளிகள்
Local
08 August 2026
குவைத் - கொழும்பு ஸ்ரீலங்கன் வானூர்தி சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
Local
08 August 2026
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
Local
08 August 2026
டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில்தேவின் சாதனையை முறியடிப்பாரா மிட்செல் ஸ்டார்க்!
Local
08 August 2026
பல்லன்சேன சிறைச்சாலை சொத்துகளுக்கு சேதமில்லை - சிறைச்சாலைகள் திணைக்களம்
Local
08 August 2026
"நீண்ட காலம் துன்பப்படுவதை விட சிறைச்சாலையில் இறப்பதே மேல்!" – கைதிகளின் ஆபத்தான மனநிலை குறித்து ஸ்ரீநேசன் எச்சரிக்கை!
Local
08 August 2026
ஹோலிவுட் திரையுலகில் சாதனை: 1 பில்லியன் டொலர் வசூலைக் கடந்த கிறிஸ்டோபர் நோலனின் “தி ஒடிசி”!
Local
08 August 2026
‘விஸ்வநாத் & சன்ஸ்’ கதை சொல்லுவது என்ன? – ரசிகர்களின் கவனம் சூர்யா மீது!
Local
08 August 2026
நாளை இடம்பெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
Local
08 August 2026