General09 August 2026

நிம்மதிப் பெருமூச்சில் இலங்கை - ஏற்றம் கண்ட நாட்டின் தங்கக் கையிருப்பு!

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஜூலை மாதத்தில் 6.59 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் 6.45 பில்லியன் டொலர்களாக காணப்பட்ட கையிருப்பு, ஜூலையில் 133 மில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளது.

இது கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 2.1 சதவீத வளர்ச்சியாகும்.

இதேவேளை, நாட்டின் தங்கக் கையிருப்பும் ஜூலை மாதத்தில் ஒரு மில்லியன் டொலரால் அதிகரித்து, 192 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes