மணிக்கு 162 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கனமழையுடன் 'டொல்பின்' சூறாவளி, சீனாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கியுள்ளது.
1951 ஆம் ஆண்டிற்குப் பிறகு கிழக்கு சீனாவைப் பாதித்த மிகப்பெரிய சூறாவளி இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கம் சராசரியாக 12 நாட்கள் நீடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு சீனாவின் பல பகுதிகளில் 250 - 500 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதுடன், சிறிய ஆறுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளது.
கிழக்கு சீனா முழுவதும் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பல துறைமுகங்கள் மற்றும் வானூர்தி நிலையங்களின் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், டொல்பின் சூறாவளியின் தாக்கம் பிலிப்பைன்ஸிலும் ஏற்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக அந்த நாட்டில் 380,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Latest News
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இஷாரா செவ்வந்திக்கு ஆகஸ்ட் 21 வரை விளக்கமறியல்!
Local
10 August 2026
கிழக்கு மாகாணத்தில் சிறுபோக நெல் அறுவடை நிறைவு
Local
10 August 2026
கேகாலையில் தாமதமாக வழங்கப்பட்ட வினாத்தாள்: இருவேறு கோணங்களில் விசாரணை!
Local
10 August 2026
அரசியல் பிரவேசத்திற்குத் தயாராகிறாரா நடிகர் தனுஷ்?
Local
10 August 2026
தாய்லாந்தில் பாடசாலைகளைத் தொடர்ந்து அரச அலுவலகத்திலும் துப்பாக்கிச்சூடு!
Local
10 August 2026
கடந்த 9 நாட்களில் 4,292 டெங்கு நோயாளர்கள் பதிவு
Local
10 August 2026
கைது செய்யப்பட்ட சாகர காரியவசம் கடுவல நீதிமன்றத்தில் முன்னிலை
Local
10 August 2026
மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு: கஞ்சிபான இம்ரானின் உறவினர் என தகவல்!
Local
10 August 2026
‘டேர்டெவில்’ திரைப்படத்தின் கதை இப்படி தான் இருக்கும்: மனம் திறந்த ஆதிக் ரவிச்சந்திரன்
Local
10 August 2026
சம்பளத்தில் மட்டுமல்ல... செல்வாக்கிலும் முன்னணியிலுள்ள நடிகைகளின் பட்டியல் வெளியீடு!
Local
10 August 2026