போதைப்பொருள் குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4,962 கைதிகளில் 1,506 பேருக்கு தற்போது புனர்வாழ்வுத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தின் போதே அதிகாரிகள் இந்தத் தகவலை வெளியிட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சிறைச்சாலைகள் திணைக்களம், சமூக அடிப்படையிலான சீர்திருத்தங்கள் திணைக்களம், புனர்வாழ்வு பணியகம் மற்றும் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நீதிமன்ற உத்தரவுகளின் கீழ் புனர்வாழ்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட கைதிகளுக்கும், தாமாக முன்வந்து புனர்வாழ்வைப் பெற விரும்பும் கைதிகளுக்கும் இந்தத் திட்டங்கள் வழங்கப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
வெவ்வேறு குற்றங்களுக்காகத் தண்டனை அனுபவித்து வரும் அனைத்துக் கைதிகளுக்கும் தற்போது புனர்வாழ்வு வாய்ப்புகளை வழங்க முடியாத நிலை காணப்படுவதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டனர்.
இதேவேளை, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வுத் திட்டங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்காகத் தேவையான பணியாளர்களை நியமிக்கவும், நாடளாவிய ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் புனர்வாழ்வுத் திட்டங்களைப் பலப்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
மேலும், புனர்வாழ்வு பெற்ற நபர்களுக்கான சமூக அங்கீகாரம் மற்றும் நற்சான்றிதழ்களைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.
புனர்வாழ்வுச் செயற்பாடுகளை மேலும் பயனுள்ளதாக்கவும், புனர்வாழ்வு பெற்ற நபர்கள் மீண்டும் சமூகத்தில் இணைவதை இலகுபடுத்தவும் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிகளைத் திருத்த வேண்டியதன் அவசியத்தையும் குழுவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

Latest News
டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!
Local
14 August 2026
மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய புத்தகங்கள் காகிதக் கூழாக இந்தியாவிற்கு ஏற்றுமதி: காவல்துறையின் அதிரடி விசாரணை!
Local
14 August 2026
பால்வெளிக்கு அப்பால் அரிய நட்சத்திரம்: விண்வெளி ஆய்வில் வெளியான பிரபஞ்ச விசித்திரம்!
Local
14 August 2026
சூரிய கிரகணத்தின்போது திருமணத்துக்கு சம்மதம் கோரிய காதலன்
Local
14 August 2026
வாகன இறக்குமதி வரி: 50% மேலதிகக் கட்டணம் டிசம்பர் 31 வரை நீடிப்பு!
Local
14 August 2026
துபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் ஷிரான் பசிக் இன்று நாட்டுக்கு
Local
14 August 2026
இந்தியா – ஆப்கானிஸ்தான் டி20 தொடர் - அட்டவணை மாற்றம் குறித்து பரிசீலனை!
Local
14 August 2026
நாட்டின் பல பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
Local
14 August 2026
தென்னிந்திய சினிமாவையே ஆக்கிரமிக்கும் சாய் அபயங்கர்! கைவசம் உள்ள முன்னணி நடிகர்களின் 12 திரைப்படங்கள்
Local
14 August 2026
"மண்டபத்திற்குள் விருந்தாளியாக நுழைந்த முதலை!" - அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்!
Local
14 August 2026