General11 August 2026

டிட்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 144 வழிபாட்டு தலங்களை சீரமைக்க ரூ. 232 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

'டிட்வா' அனர்த்தத்தினால் சேதமடைந்த மேலும் 144 வழிபாட்டுத் தலங்களைப் புனரமைக்க 232 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

'டிட்வா' அனர்த்தம் காரணமாக நாட்டில் 758 விகாரைகள், 272 ஆலயங்கள், 199 பள்ளிவாசல்கள் மற்றும் 99 தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் பாதிப்புக்குள்ளாகின.

இவற்றில் 256 வழிபாடடு தலங்களின் புனரமைப்புப் பணிகள், பௌத்த சாசன நிதியம், மத்திய கலாசார நிதியம் மற்றும் அநகாரிக தர்மபால அறக்கட்டளை ஆகியவற்றின் ஊடாக ஒதுக்கப்பட்ட 929.69 மில்லியன் ரூபாய் செலவில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதில் கடந்த ஏப்ரல் 27 மற்றும் ஜூன் 15 ஆம் திகதிகளில் எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட 329.62 மில்லியன் ரூபாவும் அடங்கும்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மேலும் 144 வழிபாட்டுத் தலங்களைப் புனரமைப்பதற்காக, மேலதிகமாக 232.07 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவது தொடர்பில் புத்த சாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes