கொரோனா பெருந்தொற்றுக்குப் பின்னரான பொருளாதார நெருக்கடி காரணமாக, ஊட்டச்சத்து நிலை குறைந்த 4 மாவட்டங்களில், தாய் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து சேவைகளை மேம்படுத்துவதற்கான 3 ஆண்டு விசேட திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
உலக வங்கி குழுமத்தின் ஜப்பான் சமூக அபிவிருத்தி நிதியம் (JSDF) வழங்கிய 2.73 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
குறிப்பாக நுவரெலியா, இரத்தினபுரி, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில், அபாயத்தில் உள்ள கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட சிறுவர்களை இலக்காக வைத்து இந்த ஊட்டச்சத்து திட்டங்கள் தொடங்கப்படுகின்றன.
மேற்படி 4 மாவட்டங்களிலும் 'மகப்பேறு மற்றும் ஆரம்பப் பிள்ளைப்பருவ ஊட்டச்சத்து சேவைகள் கருத்திட்டத்தை' அமுல்படுத்துவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Latest News
விக்ரம் வெளியிட்ட காணொளியால் பரபரப்பு – அரிய குரங்கு தொடர்பில் எழுந்துள்ள கேள்விகள்!
Local
11 August 2026
அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு அரசாங்கம் சட்டவாட்சியைத் தவறாகப் பயன்படுத்துகிறது - தினன தகுண கண்டனம்!
Local
11 August 2026
நாட்டின் 4 மாவட்டங்களிலுள்ள தாய்மார்கள், சிறுவர்களுக்கான விசேட ஊட்டச்சத்து வேலைத்திட்டம்: அமைச்சரவை அனுமதி
Local
11 August 2026
ஐபோன் பயனர்களின் வட்ஸ்அப் கணக்குகளை முடக்கும் புதிய இணையவழி தாக்குதல்!
Local
11 August 2026
நாளை ஆடி அமாவாசை : இந்துக் குருமார் அமைப்பு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Local
11 August 2026
போர் குற்றம் புரிந்தமைக்காக சிரிய முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்துக்கு மரண தண்டனை!
Local
11 August 2026
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டத்துக்கு நிதியை பெற அமைச்சரவை அனுமதி!
Local
11 August 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு தொடர்பில் மகாநாயக்க தேரர்களுடன் அரசாங்கம் ஆலோசனை
Local
11 August 2026
ரத்மலான சைமாவை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி
Local
11 August 2026
முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கும் அரச காணிகள் குத்தகைக்கு - அமைச்சரவை அனுமதி
Local
11 August 2026