நுகர்வோர் முன்அனுமதி கட்டாயமாக்கம் வாடிக்கையாளர்களின் முன்அனுமதி இன்றி வணிக ரீதியிலான விளம்பரத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வதற்கு பிரான்ஸ் நாடு நாடு தழுவிய தடையை விதித்துள்ளது.
2026 ஆகஸ்ட் 11 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின் மூலம், தேவையற்ற வணிக அழைப்புகளைத் தவிர்க்க நுகர்வோர் தங்களை விருப்பத்தின் பேரில் பதிவு செய்யும் 'ழுpவ-ழரவ' முறைமை மாற்றப்பட்டு, நிறுவனங்களே நுகர்வோரிடம் முன்அனுமதி பெற வேண்டிய 'ழுpவ-in' முறைமை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விளம்பர அழைப்புகளை மேற்கொள்வதற்கு முன்னர் குறித்த வாடிக்கையாளர் அதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளார் என்பதை நிறுவனங்கள் கட்டாயம் நிரூபிக்க வேண்டும்.
ஒரு நிறுவனத்திற்கும் வாடிக்கையாளருக்கும் இடையே ஏற்கனவே உள்ள ஒப்பந்தம் தொடர்பான தொடர்புகளுக்கு வரையறுக்கப்பட்ட சில விதிவிலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், குறித்த விதிகளை மீறுவோருக்கு 75,000 யூரோக்கள் வரையிலும், நிறுவனங்களுக்கு 3,75,000 யூரோக்கள் வரையிலும் கடுமையான அபராதம் விதிக்கப்படலாம்.
நுகர்வோர் பாதுகாப்பை பலப்படுத்தவும், தொலைபேசி வழி மோசடிகள் மற்றும் தொல்லை தரும் வர்த்தக அழைப்புகளைக் குறைக்கவும் இந்த நடவடிக்கையை பிரான்ஸ் அரசாங்கம் எடுத்துள்ளது.
Latest News
ஷேக் ஹசீனாவை ஒப்படைக்கும் வரை பிரதமர் தாரிக் ரஹ்மான் இந்தியா செல்லமாட்டார்: பங்களாதேஷ் அரசு அறிவிப்பு!
Local
17 August 2026
எரிபொருள் மானியம் வழங்கப்படாவிடின் விலை அதிகரிக்கப்படும்: வலுசக்தி அமைச்சு எச்சரிக்கை!
Local
17 August 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: பிரதிவாதிகள் தரப்பு சாட்சியங்களை இன்று முதல் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!
Local
17 August 2026
22 ஆவது திருத்தத்தின் பின்னர் மாகாண மட்டத்தில் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வுகளை நடத்தத் திட்டம்!
Local
17 August 2026
GSP+ வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்பத்தை மீளாய்வு செய்ய அமைச்சரவை உபக்குழு நியமனம்!
Local
17 August 2026
குமாரபுரம் படுகொலை வழக்கை மீள விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!
Local
16 August 2026
ரஷ்யா - யுக்ரைன் இடையே தீவிரமடைந்துள்ள வான்வழித் தாக்குதல்கள்: இரு தரப்பிலும் தலா 7 பேர் பலி!
Local
16 August 2026
எல் நினோ தாக்கத்தால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!
Local
16 August 2026
தேசிய பூங்காக்களில் நெரிசலைக் குறைக்கவும் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கவும் சஜித் யோசனை!
Local
16 August 2026
நெடுந்தீவு கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்து 10 பேர் மீட்பு!
Local
16 August 2026