நாட்டின் பல பகுதிகளில் இன்று (12) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணத்தில் அடிக்கடி மழை பெய்யக்கூடும் எனவும், ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபத்திலிருந்து புத்தளம், மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
இதன் காரணமாக குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த கடற்பரப்புகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலோடிகள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.5 முதல் 3 மீற்றர் உயரம் வரை எழும்பக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Latest News
அவுஸ்திரேலியாவில் ஐபோன் வடிவிலான இரகசிய துப்பாக்கிகள் பறிமுதல்
Local
13 August 2026
நீதிபதிகளின் ஓய்வு வயது திருத்தம் குறித்து கவலை: இலங்கைக்கு கடும் எச்சரிக்கையுடன் ஐநா கடிதம்!
Local
12 August 2026
துரந்தர் திரைப்படத்தின் வெற்றி: நடிகை சாரா அர்ஜுனுக்கு அதிகரிக்கும் பட வாய்ப்புகள்!
Local
12 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நாட்டின் பொது நலனுக்காக எடுக்கப்பட்ட தீர்மானம் - ஜனாதிபதி
Local
12 August 2026
மித்தெனியவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெக்கோ சமனின் தாய் உயிரிழப்பு
Local
12 August 2026
மித்தெனியவில் துப்பாக்கிச் சூடு - பெக்கோ சமனின் தாய்க்கு காயம்
Local
12 August 2026
குஜராத் அணிக்குத் திரும்ப ஹர்திக் பாண்டியா விதித்த நிபந்தனை – சுப்மன் கில்லிடம் ஆலோசனை கேட்ட நிர்வாகம்
Local
12 August 2026
7 மாவட்டங்களுக்கு வெப்பச் சுட்டெண் அதிகரிப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
Local
12 August 2026
யால தேசிய பூங்காவில் துப்பாக்கிச் சூடு: வேட்டைக்காரர் ஒருவருக்கு காயம்
Local
12 August 2026
கிரிக்கெட்டில் புதிய பயணத்தைத் தொடங்கும் ரஹானே!
Local
12 August 2026