2026ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று (12) புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் புனித நீர்நிலைகளில் முன்னோர்களை நினைவுகூர்ந்து சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.
ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம், பிதிர்க்கடன் உள்ளிட்ட சடங்குகளை மேற்கொள்வது இந்து சமய மரபாகக் காணப்படுகிறது.
இதனால், அதிகாலை முதலே பக்தர்கள் ஆலயங்கள் மற்றும் புனித நீர்நிலைகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பின்னர் புதன்கிழமையில் ஆடி அமாவாசை தினம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதால், இந்த ஆண்டின் ஆடி அமாவாசை பக்தர்கள் மத்தியில் சிறப்புக் கவனத்தைப் பெற்றுள்ளது.
மேலும், இந்த ஆண்டின் ஆடி அமாவாசை தினத்துடன் சூரிய கிரகணமும் இடம்பெறுகிறது.
எனினும், இன்றைய சூரிய கிரகணம் இலங்கையில் தென்படாது என்பதால், இலங்கையில் இன்று ஆடி அமாவாசை விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் குறித்த சூரிய கிரகணம் தென்படுவதால், அங்கு ஆடி அமாவாசை தொடர்பான பிதிர்க்கடன், தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகள் நாளை (13) கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரகணம் ஏற்பட்டு, அது குறிப்பிட்ட பிரதேசத்தில் தென்படும் பட்சத்திலேயே மறுநாள் தர்ப்பணம் உள்ளிட்ட பிதிர்க்கடன்களை மேற்கொள்ள வேண்டும் என ஆகம மற்றும் சம்பிரதாய அடிப்படையில் கூறப்பட்டுள்ளதாகவும் இந்துக் குருமார் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
Latest News
மரண தண்டனைக்கு முன்னர் நீதித்துறை சீர்திருத்தங்கள் அவசியம்: சிரேஷ்ட சட்டத்தரணி வலியுறுத்து!
Local
16 August 2026
பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் எங்களுடனேயே வாழ விரும்புகிறார்கள்" – பாகிஸ்தான் ஜனாதிபதி பேச்சு!
Local
16 August 2026
இலங்கையில் மதுபானத்தால் ஏற்படும் பொருளியல் இழப்பு, வரி வருவாயை விட அதிகம்: ADIC சுட்டிக்காட்டு!
Local
16 August 2026
கொரியப் போரை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர வடகொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு!
Local
16 August 2026
தாய் மற்றும் தம்பியின் உயிரை பறித்த 17 வயதுச் சிறுவன்: 'ChatGPT' செயலியைக் கொண்டு திட்டம் தீட்டியமை அம்பலம்!
Local
16 August 2026
80ஆவது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தடுமாற்றம் - அயர்லாந்து கொடியை அணிந்தார் எனவும் விமர்சனம்!
Local
16 August 2026
சிவப்பு அறிவித்தல் குற்றவாளிகள் 73 பேர் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர்: காவல்துறை மாஅதிபர்
Local
16 August 2026
"பாலம் கட்டும்போது படகோட்டிக்கு சிக்கல் ஏற்படுவது இயல்பே" – விமர்சனங்களுக்கு உவமையில் நளிந்த பதில்!
Local
16 August 2026
பொலித்தீன் பயன்பாட்டை 10 மில்லியன் அலகுகளால் குறைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை கூறுகிறது!
Local
16 August 2026
சர்வதேச ரீதியில் இந்தியா குறித்த நேர்மறையான பார்வையில் இலங்கை முதலிடம் !
Local
16 August 2026