நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது வரம்பை நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளது.
இதன்படி, இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது வரம்பை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கடந்த 7 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.
இதனிடையே, நீதிபதிகளின் ஓய்வு வயது வரம்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மகாநாயக்க தேரர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் பரிசீலித்த பின்னர், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அரசாங்கம் என்ற வகையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
அதன்படி, தானும் நீதியமைச்சரும் மகாநாயக்க தேரர்களை சந்தித்து இது தொடர்பான விடயங்களை விளக்கியதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
Latest News
யேமனின் பொப் அல்-மந்தப் அமைவிடப் பகுதியில் ஹூதி அமைப்பினர் ஏவுகணைத் தாக்குதல்!
Local
14 August 2026
5.3 வினாடிகளில் 800 கி.மீ வேகம்: சீன அதிவேக தொடருந்தின் சாதனை!
Local
14 August 2026
இலங்கை கடற்படையால் கைதான 9 தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க இந்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!
Local
14 August 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் மனுதாரர் தரப்பு சாட்சியங்கள் நிறைவு!
Local
14 August 2026
2026 உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசியவில்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
Local
13 August 2026
மனிதர்களின் மனநிலையை துல்லியமாக அறியும் நாய்கள்: வியக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்!
Local
13 August 2026
விண்வெளியில் இருந்து சூரிய கிரகணத்தைப் படம்பிடித்த நாசா வீராங்கனை ஜெசிகா மெய்ர்!விண்வெளியில் இருந்து சூரிய கிரகணத்தைப் படம்பிடித்த நாசா வீராங்கனை ஜெசிகா மெய்ர்!
Local
13 August 2026
செம்மணி புதைகுழியில் தொடரும் அதிர்ச்சி: 4 சிறார்கள் உட்பட 10 மனித என்புக்கூடுகள் அகழ்வு!
Local
13 August 2026
டொக்சிக் திரைப்பட விழாவில் மாஸ் என்ட்ரி கொடுத்த நயன்தாரா: சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்த புதிய தோற்றம்!
Local
13 August 2026
93 சந்தேகநபர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை
Local
13 August 2026