General12 August 2026

நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் திடீர் மாற்றம் : அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

கொழும்பு முதல் காலி மற்றும் மாத்தறை வரையான கடற்பரப்புகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு திசையில் இருந்து மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்பிலும், சிலாபம் முதல் புத்தளம் வரையான கடற்பரப்பிலும், மன்னார் முதல் காங்கேசன்துறை வரையான கடற்பரப்பிலும் காற்றின் வேகம் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், குறித்த கடற்பரப்புகள் இடைக்கிடையே கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் படகுப் பயணங்களில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு முதல் காலி வரையிலும், காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலும் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.5 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes