யால தேசிய பூங்காவில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசேட வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கையின் போது, அதிகாரிகளுக்கும் வேட்டைக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மொனராகலை - தனமல்வில யால தேசிய பூங்கா தலைமையக அலுவலகத்தைச் சேர்ந்த வனஜீவராசிகள் அதிகாரிகள் குழுவினர், நேற்று(11) யால காப்பகத்தில் விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த மூவரைக் கைது செய்ய முயன்றபோதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டின் போது இரு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், திஸ்ஸமஹாராம - எல்லகல இடதுகரை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் வனஜீவராசிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து பெருமளவிலான மான் இறைச்சி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், சந்தேகநபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Latest News
கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய இளைஞன், பெந்தோட்டை கடலில் மூழ்கி உயிரிழப்பு
Local
14 August 2026
கிழக்கு மாகாணத்திற்கான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படாமல் மோசடி!
Local
14 August 2026
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : அரசுப் பணி ஆணை இரத்துக்கு எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
Local
14 August 2026
இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு சிங்கப்பூர் பெண்களை எதிர்கொள்ளும் இலங்கை பெண்கள்!
Local
14 August 2026
கண்டியில் நான்கு வயது சிறுமியை விட்டுச் சென்ற பெண் - காவல்துறை தீவிர தேடுதல்!
Local
14 August 2026
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்
Local
14 August 2026
வெளிநாட்டு அரிய வகை குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமிடம் ஆவணங்களை கோரியது வனத்துறை!
Local
14 August 2026
ஸ்பைடர் வுமன் கைது செய்யப்பட்டார்!
Local
14 August 2026
பாலஸ்தீனத்தில் அத்துமீறிய குடியேற்றத்தில் தொடர்ந்தும் ஈடுபடும் இஸ்ரேல்!
Local
14 August 2026
நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசாங்கம் எவ்வித ஆபத்தையும் எடுக்கக்கூடாது : ரஜீவ் அமரசூரிய சுட்டிக்காட்டு!
Local
14 August 2026