ஐரோப்பியக் கண்டத்தின் பல பகுதிகளில் நேற்று (12) அரிய வகை முழுச் சூரிய கிரகணம் தென்பட்டது. இதன்போது சூரியனை நிலவு முழுமையாக மறைத்ததால், பல பகுதிகள் பகல் வேளையிலேயே இருளில் மூழ்கின.
இந்த அரிய வான் நிகழ்வைக் காண்பதற்கு ஸ்பெயின் உட்படப் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் திரண்டனர்.
கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் வடக்கு ஸ்பெயின் ஆகிய பகுதிகளைக் கடந்து இந்த முழுச் சூரிய கிரகணம் பயணித்தது. ஐரோப்பிய பிரதான நிலப்பரப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதிக்குக்குப் பிறகு தென்பட்ட முதல் முழுச் சூரிய கிரகணம் இதுவாகும்.
சூரியன், நிலவு மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, நிலவு சூரியனை மறைப்பதால் இந்த நிகழ்வு ஏற்படுகிறது.
ஸ்பெயின் நாட்டில் முழுச் சூரிய கிரகணத்தைக் காண்பதற்காகக் கோடிக்கணக்கான மக்கள் திரண்டனர். நாட்டின் பல நகரங்கள் மற்றும் திறந்தவெளி மைதானங்களில் கூடிய மக்கள், தெளிவான வானிலைக்கு மத்தியில் சில நிமிடங்கள் நிலவிய இருளை வியப்புடன் கண்டுகளித்தனர்.
அத்துடன், சுவிட்சர்லாந்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள 'சாசரல்' (Chasseral) மலைப்பகுதி உட்படப் பல இடங்களில் கூடி, நிலவு சூரியனின் ஒரு பகுதியை மறைத்த பகுதிச் சூரிய கிரகணத்தை மக்கள் பார்வையிட்டனர்.
மேலும் , பிரித்தானியாவில் 90 சதவீதத்துக்கும் அதிகமான அளவு சூரியனை நிலவு மறைத்த நிலையில், பகுதிச் சூரிய கிரகணம் தெளிவாகத் தென்பட்டது. லண்டனில் உள்ள புகழ்பெற்ற 'பிக் பென்' (Big Ben) மணிக்கூட்டு கோபுரத்தின் பின்னணியில் கிரகணம் மிக அழகாகக் காட்சியளித்தது.
மேலும், பர்மிங்ஹாமில் நடைபெற்ற ஐரோப்பிய தடகள செம்பியன்ஷிப் போட்டியின் இடையேயும் ரசிகர்கள் இதனை ரசித்தனர். ஹங்கேரியின் அகாட் (Agard) பகுதியில் உள்ள அவதானிப்புக் கோபுரத்தில் கூடிய வானியல் ஆர்வலர்கள் பகுதிச் சூரிய கிரகணத்தைக் கண்டுகளித்தனர்.

Latest News
டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!
Local
14 August 2026
மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய புத்தகங்கள் காகிதக் கூழாக இந்தியாவிற்கு ஏற்றுமதி: காவல்துறையின் அதிரடி விசாரணை!
Local
14 August 2026
பால்வெளிக்கு அப்பால் அரிய நட்சத்திரம்: விண்வெளி ஆய்வில் வெளியான பிரபஞ்ச விசித்திரம்!
Local
14 August 2026
சூரிய கிரகணத்தின்போது திருமணத்துக்கு சம்மதம் கோரிய காதலன்
Local
14 August 2026
வாகன இறக்குமதி வரி: 50% மேலதிகக் கட்டணம் டிசம்பர் 31 வரை நீடிப்பு!
Local
14 August 2026
துபாயில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர் ஷிரான் பசிக் இன்று நாட்டுக்கு
Local
14 August 2026
இந்தியா – ஆப்கானிஸ்தான் டி20 தொடர் - அட்டவணை மாற்றம் குறித்து பரிசீலனை!
Local
14 August 2026
நாட்டின் பல பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
Local
14 August 2026
தென்னிந்திய சினிமாவையே ஆக்கிரமிக்கும் சாய் அபயங்கர்! கைவசம் உள்ள முன்னணி நடிகர்களின் 12 திரைப்படங்கள்
Local
14 August 2026
"மண்டபத்திற்குள் விருந்தாளியாக நுழைந்த முதலை!" - அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்!
Local
14 August 2026