சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள டோங்ஹூ ஆய்வகத்தில் 1 கிலோமீட்டர் நீளமுள்ள சோதனைப் பாதையில் நடத்தப்பட்ட ஆய்வில், 1.1 தொன் எடையுள்ள சோதனை அதிவேக தொடருந்து (Maglev Train) முடுக்கப்பட்டு, வெறும் 5.3 வினாடிகளில் மணித்தியாலத்திற்கு 0 முதல் 800 கிலோமீட்டர் வேகத்தை எட்டி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.
இந்தச் சோதனையில் தொடருந்து அதிவேகத்தை எட்டியது மட்டுமன்றி, மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் தொழில் நுட்பத்தின் மூலம் சுமார் 200 மீட்டர் தூரத்திற்குள் சீராக நிறுத்தப்பட்டு அதன் பாதுகாப்புத் தன்மையும் உறுதிசெய்யப்பட்டது.
கடந்த 6 மாதங்களில் இந்தச் சோதனை தொடருந்து தனது சொந்த சாதனையை முறியடிப்பது இது மூன்றாவது முறையாகும்.
2025 ஜூன் மாதம் 7 வினாடிகளில் 650 கி.மீ/மணி வேகத்தை எட்டி சாதனை படைத்த நிலையில், தொடர் ஆய்வுகள் மூலம் நேரத்தைக் குறைத்து தற்போது 800 கி.மீ/மணி வேகத்தை எட்டியுள்ளது.
இது மனிதர்களை ஏற்றிச் செல்வதற்கான தொடருந்து அல்ல. மின்-காந்த விசை செலுத்துகை, அதிவேக மிதப்புக்கட்டுப்பாடு மற்றும் அவசரகால பிரேக்கிங் ஆகிய உயர்தொழில்நுட்பங்களை சோதிக்கவே இது பயன்படுத்தப்படுகிறது.
இந்த தொழில்நுட்ப கொள்கைகள் மூலம் எதிர்வரும் காலத்தில் ரொக்கெட்டுகள் மற்றும் போர் வானூர்திகளை விண்ணில் ஏவும் அமைப்புகள் (launch systems) மற்றும் குறைந்த அழுத்த குழாய் (vacuum tube) வழியிலான அதிவேகப் போக்குவரத்து அமைப்புகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
10 வயதுச் சிறுமியிடம் முறைக்கேடாக நடந்துக்கொண்டதாக கூறப்படும் தந்தையும் தாத்தாவும் தலைமறைவு
Local
14 August 2026
மலேசியாவில் நடந்தது என்ன? - "கஞ்சிபானை இம்ரான்" விவகாரத்தில் வெளிவந்த உண்மை!
Local
14 August 2026
கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய இளைஞன், பெந்தோட்டை கடலில் மூழ்கி உயிரிழப்பு
Local
14 August 2026
கிழக்கு மாகாணத்திற்கான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்படாமல் மோசடி!
Local
14 August 2026
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : அரசுப் பணி ஆணை இரத்துக்கு எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
Local
14 August 2026
இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு சிங்கப்பூர் பெண்களை எதிர்கொள்ளும் இலங்கை பெண்கள்!
Local
14 August 2026
கண்டியில் நான்கு வயது சிறுமியை விட்டுச் சென்ற பெண் - காவல்துறை தீவிர தேடுதல்!
Local
14 August 2026
நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்
Local
14 August 2026
வெளிநாட்டு அரிய வகை குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமிடம் ஆவணங்களை கோரியது வனத்துறை!
Local
14 August 2026
ஸ்பைடர் வுமன் கைது செய்யப்பட்டார்!
Local
14 August 2026