இலகுரக இந்திய வகை உந்துருளிகளில் இளைஞர்கள் அதிக வேகத்தில் செல்வதைத் தவிர்க்குமாறு காவலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இவ்வாறான செயற்பாடுகளினாலேயே வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வீதிப்போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மாஅதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர, வேலைக்குச் செல்லுதல், நகருக்குப் பயணித்தல் மற்றும் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற பொதுவான போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்யும் தேர்வாகவே இந்த உந்துருளிகள் அறிமுகப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், 18 வயதிற்கு உட்பட்ட மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பல இளைஞர்கள் தற்போது இந்த உந்துருளியை அதிவேகத்தில் செலுத்துவதற்குப் பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
"இந்த உந்துருளிகள் குறைந்த எடையும், குறைந்த எரிபொருள் பயன்பாடும் கொண்டவை. ஆனால், இவற்றை மிக அதிக வேகத்தில் செலுத்தி திடீரென வேக கட்டுப்பாடு பயன்படுத்தும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விடுகின்றன.
வலுவான வேக கட்டுப்பாடு அமைப்புகளைக் கொண்ட எடைகூடிய ஜப்பானிய உந்துருளிகளை போல் இல்லாமல், இந்திய உந்துருளிகள் அதிவேகத்தில் செல்லும்போது சறுக்கி விழக்கூடியவை அல்லது சரியான நேரத்திற்குச் செயல்படத் தவறக்கூடியவை" என பிரதி காவல்துறை மாஅதிபர் சேனாதீர விளக்கமளித்தார்.
அதிவேகம் மற்றும் திடீர் வேக கட்டுப்பாட்டை பயன்படுத்துதல் காரணமாக ஏற்படும் விபத்துகள் குறித்து காவல்துறைக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், இதன் போது உந்துருளிகளிலிருந்து தூக்கி வீசப்பட்டு எதிரே வரும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்த உந்துருளிகள் பந்தயங்களில் ஈடுபடுவதற்கோ அல்லது சாகசங்களில் ஈடுபடுவதற்கோ தயாரிக்கப்பட்டவை அல்ல என அவர் வலியுறுத்தினார்.
போக்குவரத்து வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வாகனங்களை ஆபத்தான முறையில் பயன்படுத்துவதைத் தவிர்த்து, பொறுப்புடன் பயணிக்குமாறு இளைஞர்களைக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
கைது செய்யப்பட்ட சமித்புர சது மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு
Local
18 August 2026
தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி ஐ.நா.விடம் 'நீதியின் ஓலம்' பிரகடனம் கையளிப்பு
Local
18 August 2026
கஞ்சிப்பானை இம்ரானின் உறவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட விவகாரம் : 05 பேர் கைது
Local
18 August 2026
திருகோணமலையில் அகற்றப்பட்ட 3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் உலக சாதனையாகப் பதிவாக வாய்ப்பு
Local
18 August 2026
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர்!
Local
18 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
Local
18 August 2026
வரலாற்றில் முதன்முறையாக போக்குவரத்து ஆணைக்குழுவின் முக்கிய பதவிக்கு பெண்கள்!
Local
18 August 2026
கண்டலம விருந்தகத்துக்குள் புகுந்த காட்டு யானை எனினும் ஆச்சரியம்!
Local
18 August 2026
புதிய விதியின் கீழ், களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் வீரர் நெய்மர்!
Local
18 August 2026
சமித்புர சது ஓமானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கைது !
Local
18 August 2026