ஜப்பானின் சிபா மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் மாயமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிபா மாகாணத்தின் சில பகுதிகளில் 24 மணி நேரத்திற்குள் 360 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக பல வீதிகள் மற்றும் தொடருந்து பாதைகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல வீடுகளுக்கான மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த நால்வரில் வெள்ளத்தில் மூழ்கிய வாகனத்திற்குள் சிக்கிய ஒருவரும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மீட்புப் பணிகளுக்காக ஜப்பான் இராணுவத்தினரும் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தான் இதற்கு முன்னர் பல பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொண்டிருந்தபோதிலும், இதுபோன்றதொரு நிலைமையை ஒருபோதும் அனுபவித்ததில்லை என சிபா மாகாண ஆளுநர் தோஷிஹிட்டோ குமாகாய் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போக்குவரத்து தடைப்பட்டதால் நரிடா வானுார்தி நிலையத்தில் சுமார் 7,000 பேர் சிக்கித் தவிப்பதாக வானுார்தி நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Latest News
அளுத்கமவில் தொடருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து: ஒருவர் பலி; மற்றொருவர் காயம்!
Local
23 August 2026
‘Diamond Excellence விருதுகள் 2026 - ஹிரு ஊடகப் வலையமைப்புக்கு பல விருதுகள்!
Local
23 August 2026
முதல் நாளில் 300 ஓட்டங்களை குவித்தது இந்தியா - 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியது இலங்கை
Local
23 August 2026
முச்சக்கர வண்டி ஓட்டுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்த பரிசீலனை!
Local
23 August 2026
இலங்கை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்!
Local
23 August 2026
மட்டக்களப்பில் உந்துருளி விபத்து: இரு மாணவர்கள் பலி - மேலும் 5 பேர் காயம்!
Local
23 August 2026
ஹக்கலையில் பேருந்து மோதியதில் ஒருவர் பலி!
Local
23 August 2026
நாடு முழுவதும் வறட்சி உக்கிரம்: விவசாயம் பாதிப்பு - 72,000க்கும் மேற்பட்டோருக்குப் குடிநீர் விநியோகம்!
Local
23 August 2026
பொரளையில் வீடொன்றுக்கு முன்பாக கைக்குண்டு மீட்பு!
Local
23 August 2026
8 வருட இரகசிய சேமிப்பு - ஒரே இரவில் எலியால் நேர்ந்த விபரீதம்
Local
23 August 2026