General14 August 2026

நாட்டின் பல பகுதிகளில் நாளை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சபரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்படுகிறது.

நாளை பிற்பகல் 2.00 மணிக்கு மேல் மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes