மத்திய கிழக்கில் அமெரிக்கா, ஈரான், லெபனான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் மற்றும் அரசியல் பதற்றங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
இந்தநிலையில், ஈரான் தோற்கடிக்கப்பட்ட பின்னர், உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்மூஸ் நீரிணையை, ":அமெரிக்காவின் பிராந்தியம்" என விரைவில் அறிவிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த நீர்சந்தி எப்போதுமே ஈரானின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என்றும், ஈரானின் அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் கடந்து செல்ல முடியாது என்றும் ஈரானிய இராணுவம் பதில் அளித்துள்ளது.
இதற்கிடையில், தெஹ்ரானை முற்றாக தனிமைப்படுத்தும் நோக்கில், ஈரான் மீது இதுவரை கண்டிராத கடுமையான பொருளாதாரக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) எச்சரித்துள்ளார்.
இதேவேளை, லெபனான் அரசுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைப் போக்கை ஏற்க முடியாது என்றும், இது "சரணடைவதற்கு" சமம் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நைம் காசிம் (Naim Qassem) குற்றம் சாட்டியுள்ளார்.
லெபனான் அரசு இஸ்ரேலின் நிபந்தனைகளுக்குப் பணியக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது இவ்வாறிருக்க, ஏமனின் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மொகா துறைமுக நகர் மீது ஹு_ தி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Latest News
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!
Local
17 August 2026
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
Local
17 August 2026
சூரியனின் "விழுதுகள்" நிகழ்ச்சியில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கை: மலையக இந்து குருமார் ஒன்றியம் ஆதரவு
Local
17 August 2026
இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்: 5.9 மெக்னிடியூட் அளவில் பதிவு
Local
17 August 2026
கால்பந்து வாழ்க்கைக்கு விடைகொடுக்கிறாரா கிறிஸ்டியானோ ரொனால்டோ?
Local
17 August 2026
தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சியைக் குறைக்க அமெரிக்கா தீர்மானம்: ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு
Local
17 August 2026
சாப்பிடும் நேரம் தவறினால் உடல் எடை கூடுமா? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!
Local
17 August 2026
கஞ்சிபானை இம்ரான் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்: பாதுகாப்பு பிரதி அமைச்சர் அறிவிப்பு!
Local
17 August 2026
ஜெர்மனியின் ஜூலியன் வெபரின் 90.40 மீற்றர் எறிதலால் ருமேஷ் தரங்கவின் முதலிடத்துக்கு சவால்
Local
17 August 2026
இன்று 7 மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை!
Local
17 August 2026