பேருந்து நிறுத்தங்களை மறைக்கும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல்துறை நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பேருந்து நிறுத்தங்களில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் வீதியின் நடுவே பயணிகளை ஏற்றவும் இறக்கவும் வேண்டிய நிலை ஏற்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வசதியுடன் கூடிய பேருந்துகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பாதுகாப்பாக பேருந்துகளில் ஏறி இறங்குவதை உறுதி செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பேருந்து நிறுத்தத்திற்கு 30 மீற்றர் முன்னதாகவும், அதன் வெளியேறும் பகுதியிலிருந்து 15 மீற்றர் வரையிலும் தனியார் வாகனங்களை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதியை மீறும் வாகன ஓட்டுநர்களுக்கு எதிராக வீதிப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
Latest News
பிள்ளையான் உட்பட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
Local
17 August 2026
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!
Local
17 August 2026
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
Local
17 August 2026
சூரியனின் "விழுதுகள்" நிகழ்ச்சியில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கை: மலையக இந்து குருமார் ஒன்றியம் ஆதரவு
Local
17 August 2026
இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்: 5.9 மெக்னிடியூட் அளவில் பதிவு
Local
17 August 2026
கால்பந்து வாழ்க்கைக்கு விடைகொடுக்கிறாரா கிறிஸ்டியானோ ரொனால்டோ?
Local
17 August 2026
தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சியைக் குறைக்க அமெரிக்கா தீர்மானம்: ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு
Local
17 August 2026
சாப்பிடும் நேரம் தவறினால் உடல் எடை கூடுமா? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!
Local
17 August 2026
கஞ்சிபானை இம்ரான் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்: பாதுகாப்பு பிரதி அமைச்சர் அறிவிப்பு!
Local
17 August 2026
ஜெர்மனியின் ஜூலியன் வெபரின் 90.40 மீற்றர் எறிதலால் ருமேஷ் தரங்கவின் முதலிடத்துக்கு சவால்
Local
17 August 2026