இந்து கலாசார திணைக்களத்தின் பணிகளை மேலும் பலப்படுத்தி, ஆலய வளர்ச்சி மற்றும் மாணவர்களுக்கான பயிற்சிகளைத் தீவிரப்படுத்த 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதியை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் இந்து கலாச்சார திணைக்களத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
வரும் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்த நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்கத் தேவையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வரும் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்த நிதி ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்கத் தேவையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திணைக்களத்தின் ஊடாக ஆலயங்களுக்கான நிதி உதவிகள், பல்வேறு சமயச் செயற்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் தமக்குரிய அமைச்சுப் பொறுப்புகளுக்கு அப்பாலும், இந்து கலாசார திணைக்களத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் திறம்படச் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் செயற்பாடுகளை மேலும் உறுதியோடும் பலத்தோடும் முன்னெடுத்துச் செல்வதே முதன்மை நோக்கமாகும்.
இந்தச் செயற்பாடுகளை மேலும் உறுதியோடும் பலத்தோடும் முன்னெடுத்துச் செல்வதே முதன்மை நோக்கமாகும்.
எனவே வரவிருக்கும் நிதியொதுக்கீட்டின் மூலம் திணைக்களத்தின் திட்டங்களை விரைவுபடுத்தி, சமய மற்றும் பண்பாட்டுச் செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
Latest News
மரண தண்டனைக்கு முன்னர் நீதித்துறை சீர்திருத்தங்கள் அவசியம்: சிரேஷ்ட சட்டத்தரணி வலியுறுத்து!
Local
16 August 2026
பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் எங்களுடனேயே வாழ விரும்புகிறார்கள்" – பாகிஸ்தான் ஜனாதிபதி பேச்சு!
Local
16 August 2026
இலங்கையில் மதுபானத்தால் ஏற்படும் பொருளியல் இழப்பு, வரி வருவாயை விட அதிகம்: ADIC சுட்டிக்காட்டு!
Local
16 August 2026
கொரியப் போரை உத்தியோகபூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர வடகொரியாவுக்கு தென் கொரியா அழைப்பு!
Local
16 August 2026
தாய் மற்றும் தம்பியின் உயிரை பறித்த 17 வயதுச் சிறுவன்: 'ChatGPT' செயலியைக் கொண்டு திட்டம் தீட்டியமை அம்பலம்!
Local
16 August 2026
80ஆவது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தடுமாற்றம் - அயர்லாந்து கொடியை அணிந்தார் எனவும் விமர்சனம்!
Local
16 August 2026
சிவப்பு அறிவித்தல் குற்றவாளிகள் 73 பேர் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர்: காவல்துறை மாஅதிபர்
Local
16 August 2026
"பாலம் கட்டும்போது படகோட்டிக்கு சிக்கல் ஏற்படுவது இயல்பே" – விமர்சனங்களுக்கு உவமையில் நளிந்த பதில்!
Local
16 August 2026
பொலித்தீன் பயன்பாட்டை 10 மில்லியன் அலகுகளால் குறைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை கூறுகிறது!
Local
16 August 2026
சர்வதேச ரீதியில் இந்தியா குறித்த நேர்மறையான பார்வையில் இலங்கை முதலிடம் !
Local
16 August 2026