தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய நிலையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகளைத் தாண்டி, நடிகை த்ரிஷாவின் பங்கேற்பே தமிழக ஊடகங்களில் முக்கிய பேசுபொருளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா தனது தாயாருடன் பங்கேற்றிருந்தமை தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் கவனம் பெற்றுள்ளன.
குறிப்பாக, முதலமைச்சர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் சோபா ஆகியோருக்கு அருகில் நடிகை த்ரிஷாவும் அவரது தாயாரும் அமர்ந்திருந்த காணொளிகள் ஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வரை தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த விஜய், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராகி, முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.
கட்சி ஆரம்பிக்கப்பட்டு இரண்டே ஆண்டுகளில், அதுவும் முதல் தேர்தலிலேயே 1.72 கோடி மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்தது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற வலுவான அரசியல் கட்சிகளுக்கு மத்தியில், விஜய்யின் தனிப்பட்ட செல்வாக்கை மையமாகக் கொண்டு கிடைத்த இந்த வெற்றியும் தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
வேட்பாளர்களை விட விஜய் என்ற தனிநபரை நம்பி மக்கள் வாக்களித்ததாகக் கூறப்படும் இந்த அரசியல் மாற்றமும் தமிழக அரசியல் வரலாற்றில் கவனம் பெற்றுள்ளது.
இவ்வாறான பல்வேறு அரசியல் முக்கியத்துவங்களுக்கு மத்தியில், முதலமைச்சர் விஜய் முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய சுதந்திர தின விழாவில், நடிகை த்ரிஷாவின் பங்கேற்பே தமிழக ஊடகங்களில் கூடுதல் கவனம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் - அவசர உதவி எண்ணும் அறிவிப்பு
Local
26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு -காணாமல்போனோர் எண்ணிக்கை 579 ஆக அதிகரிப்பு
Local
26 August 2026
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை : முதலிடம் பிடித்தார் மிட்செல் ஸ்டார்க்!
Local
26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கினால் 95 பேர் பலி - நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட பனிச்சரிவே காரணமாம்!
Local
26 August 2026
இலங்கையின் ருமேஷ் தரங்க உலகளவில் முதலிடம்!
Local
26 August 2026
சமூக ஊடகங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் விற்பனை - பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை
Local
26 August 2026
குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு: அமெரிக்க மாகாணங்களுடன் மெட்டா நிறுவனத்தின் புதிய சமரச ஒப்பந்தம்!
Local
26 August 2026
பங்களாதேஷுக்கு எதிரான மாபெரும் சாதனை: பும்ராவை பின்னுக்குத் தள்ளிய ஸ்டார்க்
Local
26 August 2026
"உங்களிடம் நடிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும் - சிறுமி நக்ஷத்ராவின் நடிப்பை வியந்து பாராட்டிய நடிகர் தனுஷ்!
Local
26 August 2026
தியாகி பொன் சிவகுமாரனின் 76 ஆவது பிறந்தநாள் நினைவு தினம் அனுசரிப்பு!
Local
26 August 2026