ரஷ்யா மற்றும் யுக்ரைன் இடையிலான வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பிலும் தலா 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் யுக்ரைனால் முன்னெடுக்கப்பட்ட மிகப்பெரிய அளவிலான ஆளில்லா வானூர்தி தாக்குதல் இதுவென ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
822 ஆளில்லா வானூர்தி பயன்படுத்தி யுக்ரைன் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், அதில் 600 ஆளில்லா வானூர்திகள் மொஸ்கோவை இலக்கு வைத்து அனுப்பப்பட்டதாகப் பிராந்திய ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் தென்மேற்கு ரஷ்யாவின் ரொஸ்டோவ் (Rostov) பிராந்தியத்தில் ஐந்தினரும், பெல்கோரட் (Belgorod) மற்றும் மொஸ்கோ பகுதிகளில் இருவருமாக மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மொஸ்கோ மையப்பகுதியிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள 'வைல்ட்பெர்ரீஸ்' (Wildberries) இணையவழி வர்த்தக நிறுவனத்தின் களஞ்சியசாலை ஒன்றும் தாக்குதலுக்கு இலக்காகித் தீக்கிரையாகியுள்ளது.
மறுபுறம், யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களிலும் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 39 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
தலைநகர் கியேவில் உள்ள 'ஃபிளமிங்கோ' (Flamingo) ஏவுகணைகளுக்கான உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் மையம் மற்றும் வானூர்தி உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றையே தாம் இலக்கு வைத்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
எனினும், பொச்சைனா (Pochayna) மாவட்டத்தில் உள்ள புத்தகங்கள் மற்றும் பழைய இசைத்தட்டுகள் விற்பனை செய்யும் பிரபல சந்தையொன்று இந்தத் தாக்குதலில் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக யுக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலால் தங்களது அரிய வகை இசைத்தட்டுகள் மற்றும் புத்தகங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளதாக அங்குள்ள வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த வாரம் மாத்திரம் யுக்ரைனின் 13 பிராந்தியங்களை இலக்கு வைத்து ரஷ்யா 1,550 க்கும் அதிகமான ஆளில்லா வானூர்திகள், 1,560 வழிகாட்டப்பட்ட வான் குண்டுகள் மற்றும் 62 ஏவுகணைகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Latest News
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் - அவசர உதவி எண்ணும் அறிவிப்பு
Local
26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு -காணாமல்போனோர் எண்ணிக்கை 579 ஆக அதிகரிப்பு
Local
26 August 2026
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை : முதலிடம் பிடித்தார் மிட்செல் ஸ்டார்க்!
Local
26 August 2026
நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கினால் 95 பேர் பலி - நிலநடுக்கத்தால் தூண்டப்பட்ட பனிச்சரிவே காரணமாம்!
Local
26 August 2026
இலங்கையின் ருமேஷ் தரங்க உலகளவில் முதலிடம்!
Local
26 August 2026
சமூக ஊடகங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் விற்பனை - பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை
Local
26 August 2026
குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு: அமெரிக்க மாகாணங்களுடன் மெட்டா நிறுவனத்தின் புதிய சமரச ஒப்பந்தம்!
Local
26 August 2026
பங்களாதேஷுக்கு எதிரான மாபெரும் சாதனை: பும்ராவை பின்னுக்குத் தள்ளிய ஸ்டார்க்
Local
26 August 2026
"உங்களிடம் நடிப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும் - சிறுமி நக்ஷத்ராவின் நடிப்பை வியந்து பாராட்டிய நடிகர் தனுஷ்!
Local
26 August 2026
தியாகி பொன் சிவகுமாரனின் 76 ஆவது பிறந்தநாள் நினைவு தினம் அனுசரிப்பு!
Local
26 August 2026