எரிபொருள் இறக்குமதிக்காகத் தற்போது மேற்கொள்ளப்படும் செலவினங்கள் மீளாய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கத்திடம் புதிய மானியத்தைக் கோருவதற்கு அல்லது விலை திருத்தம் உள்ளிட்ட மாற்று நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பதற்கு வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
உலகச் சந்தையில் பெட்ரோல், டீசல் மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் விலையேற்றம் இறக்குமதிச் செலவை நேரடியாகப் பாதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, எதிர்வரும் இரு வாரங்களுக்குள் இதுகுறித்த மீளாய்வை மேற்கொள்வது அவசியமானது எனக் தெரிவித்துள்ளார்.
இந்த மீளாய்வுக்குப் பின்னர், அரசாங்கத்தினால் முன்னர் வழங்கப்பட்டுப் பின்னர் இடைநிறுத்தப்பட்ட 15 பில்லியன் ரூபா மானியத்தை மீண்டும் கோரவுள்ளதாகவும், அல்லது நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக விலைத் திருத்தம் போன்ற மாற்று வழிகளை நாடவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடைசியாகக் கடந்த ஜூன் மாதம் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டு, அது ஜூலை மாதம் அமுலுக்கு வந்த போதிலும், நடப்பு மாதத்தில் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மத்திய கிழக்கு போர் வெடித்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், எரிபொருள் விலைகள் தற்போது 48 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அத்துடன் காப்புறுதி தவணைக் கட்டணங்கள் மற்றும் போக்குவரத்துச் செலவுகளும் உயர்ந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தியா, சிங்கப்பூர், தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து இலங்கை எரிபொருளைப் பெற்றபோதிலும், தொடர்ந்து அதிகரிக்கும் உலகச் சந்தை விலை பெரும் கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
யுக்ரைன்-மால்டோவா எல்லைப் பகுதியில் ரஷ்ய ஆளில்லா வானூர்தி தாக்குதல்: இருவர் பலி
Local
10 September 2026
ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மெக்ஸ் அறிமுகம் – புதிய அம்சங்கள் இதோ!
Local
10 September 2026
ஈரான் அணுசக்தி விவகாரம்: ஐநா பாதுகாப்புச் சபைக்குத் பாரப்படுத்துவதற்கு சர்வதேச அணுசக்தி முகவரகம் தீர்மானம்
Local
10 September 2026
சீனாவின் புதிய தூதுவர் மஹிந்தவை சந்தித்தார்!
Local
10 September 2026
அம்பாறையில் வறட்சியால் பாதிப்புக்குள்ளான வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம்
Local
09 September 2026
22வது அரசியலமைப்புத் திருத்தம்: ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு சஜித் பிரேமதாச கேள்வி
Local
09 September 2026
காலாவதியான தேயிலைத் தூள் விற்பனை: நிறுவனத்துக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதம்!
Local
09 September 2026
இலக்கத்தகடு நிலுவை பிரச்சினை ஆறு மாதங்களில் தீர்க்கப்படும்- மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம்!
Local
09 September 2026
பேரழிவில் கைக்கொடுத்த இந்தியா: பிரதமர் ஹரிணியுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
Local
09 September 2026
மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச்சூடு - இருவர் தப்பியோட்டம்
Local
09 September 2026