நாட்டிலிருந்து தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றக் குழுவின் முக்கிய புள்ளியான 'கஞ்சிபானை இம்ரான்' விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச காவல்துறையின் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 58 பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் இதுவரை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரசியல் பிரமுகர்கள் சிலர் அபாயகரமான குற்றவாளிகளுடனும், புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவருடனும் தொடர்புகளைப் பேணி வந்ததாகக் குற்றம் சுமத்திய பிரதி அமைச்சர், அந்த காலப்பகுதியில் சட்டத்தின் ஆட்சி எவ்வாறு இருந்தது என்ற கேள்வி எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான குற்றவியல் வலைப்பின்னல்களின் தலைவர்களை இலக்கு வைத்து அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் பாதாள உலகக் குழுவினர் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அபாயகரமான குற்றவாளிகளை நாட்டிற்குத் திரும்ப அழைத்துவருவதற்குப் பாரிய பிரயத்தனம் தேவைப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது சட்டவாட்சியின் அதிகாரத்தையும் மேலாதிக்கத்தையும் உறுதிப்படுத்துவதாக உள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Latest News
கைது செய்யப்பட்ட சமித்புர சது மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு
Local
18 August 2026
தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி ஐ.நா.விடம் 'நீதியின் ஓலம்' பிரகடனம் கையளிப்பு
Local
18 August 2026
கஞ்சிப்பானை இம்ரானின் உறவினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட விவகாரம் : 05 பேர் கைது
Local
18 August 2026
திருகோணமலையில் அகற்றப்பட்ட 3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல் உலக சாதனையாகப் பதிவாக வாய்ப்பு
Local
18 August 2026
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர்!
Local
18 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
Local
18 August 2026
வரலாற்றில் முதன்முறையாக போக்குவரத்து ஆணைக்குழுவின் முக்கிய பதவிக்கு பெண்கள்!
Local
18 August 2026
கண்டலம விருந்தகத்துக்குள் புகுந்த காட்டு யானை எனினும் ஆச்சரியம்!
Local
18 August 2026
புதிய விதியின் கீழ், களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் வீரர் நெய்மர்!
Local
18 August 2026
சமித்புர சது ஓமானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கைது !
Local
18 August 2026