நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பது மட்டுமல்லாமல், எந்த நேரத்தில் உணவு எடுத்துக்கொள்கிறோம் என்பதும் உடல் எடை, இரத்தச் சர்க்கரை மற்றும் இதய ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச ஊடகம் ஒன்று இது தொடர்பான விடயத்தை ஆராய்ந்துள்ளது.
உடலின் உயிரியல் கடிகாரம் எனப்படும் Circadian Rhythm, தூக்கம், பசி, செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு உடல் செயற்பாடுகளை கட்டுப்படுத்துகிறது.
ஸ்பெயினில் 420 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒரே உணவுமுறையைப் பின்பற்றியவர்களில் மதிய உணவை முன்கூட்டியே எடுத்துக்கொண்டவர்கள் அதிக எடையையும் வேகமாகக் குறைத்துள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல், தாமதமாக மதிய உணவு உட்கொண்டவர்களுக்கு நீரிழிவுக் கட்டுப்பாடு பாதிக்கப்பட்டதுடன், கார்போஹைட்ரேட்டுகளை எரிக்கும் திறனும் குறைந்ததாக மற்றொரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, இரவு நேரத்தில் உடல் தூக்கத்திற்குத் தயாராகும்போது அதிகரிக்கும் மெலட்டோனின் என்ற ஹோர்மோன், அந்த நேரத்தில் உணவு உட்கொள்ளும்போது குளுக்கோஸ் கட்டுப்பாட்டை பாதிக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தாமதமாக உணவு உட்கொள்வது அடுத்த நாள் அதிக பசியை ஏற்படுத்தக்கூடும் எனவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதனால் அதிக அளவில் உணவு உட்கொள்ளும் நிலை ஏற்படுவதுடன், உடலில் கொழுப்பு சேமிக்கப்படும் வாய்ப்பும் அதிகரிக்கலாம்.
பிரான்ஸில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும், தாமதமாக காலை உணவு உட்கொண்டவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், உணவு நேரத்திலும் சில மாற்றங்களை மேற்கொள்வது பயனுள்ளதாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
காலை மற்றும் மதிய உணவை போதுமான அளவில் எடுத்துக்கொள்வதுடன், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை பகல் நேரத்தில் சேர்த்துக்கொள்ளவும், இரவு உணவை இலகுவாக வைத்துக்கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும், இரவு உணவை உறங்குவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பாக முடித்துக்கொள்வது உடலின் இயற்கையான உயிரியல் கடிகாரத்துடன் சிறப்பாக ஒத்துப்போகும் என தெரிவிக்கப்படுகிறது.
எனவே, ஆரோக்கியமான உணவுமுறை என்பது “என்ன சாப்பிடுகிறோம்?” என்பதுடன் “எப்போது சாப்பிடுகிறோம்?” என்பதையும் கருத்தில் கொள்வதாக இருக்க வேண்டும்.
Latest News
வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மாகாண சபை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!
Local
17 August 2026
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
Local
17 August 2026
சூரியனின் "விழுதுகள்" நிகழ்ச்சியில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கை: மலையக இந்து குருமார் ஒன்றியம் ஆதரவு
Local
17 August 2026
இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்: 5.9 மெக்னிடியூட் அளவில் பதிவு
Local
17 August 2026
கால்பந்து வாழ்க்கைக்கு விடைகொடுக்கிறாரா கிறிஸ்டியானோ ரொனால்டோ?
Local
17 August 2026
தென் கொரியாவுடனான கூட்டு இராணுவப் பயிற்சியைக் குறைக்க அமெரிக்கா தீர்மானம்: ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பு
Local
17 August 2026
சாப்பிடும் நேரம் தவறினால் உடல் எடை கூடுமா? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்!
Local
17 August 2026
கஞ்சிபானை இம்ரான் விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார்: பாதுகாப்பு பிரதி அமைச்சர் அறிவிப்பு!
Local
17 August 2026
ஜெர்மனியின் ஜூலியன் வெபரின் 90.40 மீற்றர் எறிதலால் ருமேஷ் தரங்கவின் முதலிடத்துக்கு சவால்
Local
17 August 2026
இன்று 7 மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை!
Local
17 August 2026