கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, நடப்பு பருவத்தின் முடிவில் தொழில்முறை கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை வெளிப்படுத்தியுள்ளார்.
41 வயதான போர்த்துக்கல் அணியின் தலைவர், தனது இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான கால்பந்து பயணத்தை நிறைவு செய்யும் வகையில், எதிர்வரும் ஆண்டே தனது விளையாட்டு வாழ்க்கையின் இறுதி ஆண்டாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.
"இது எனது கால்பந்து வாழ்க்கையின் கடைசி ஆண்டாக இருக்கலாம். நான் ஒரு சிறப்பான மரபை விட்டுச் செல்ல விரும்புகிறேன்" என அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கழக மற்றும் நாட்டுக்காக இதுவரை 976 கோல்களை அடித்துள்ள ரொனால்டோ, வரலாற்றில் 1,000 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு இன்னும் 24 கோல்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
2002ஆம் ஆண்டு Sporting CP அணியுடன் தனது கால்பந்து வாழ்க்கையைத் ஆரம்பித்த ரொனால்டோ, பின்னர் Manchester United, Real Madrid மற்றும் Juventus அணிகளுக்காக விளையாடினார்.
தற்போது சவூதி புரோ லீக் அணியான Al-Nassr அணிக்காக விளையாடி வருகிறார்.
ஓய்வு பெறுவது தனது வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும் என குறிப்பிட்ட அவர், கால்பந்திலிருந்து விலகிய பின்னர் அதிகமாகப் பயணம் செய்வது, விளையாடுவது மற்றும் வாழ்க்கையை அனுபவிப்பதில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் ரொனால்டோ, தனது இறுதி பருவமாக இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் 1,000 கோல்கள் என்ற வரலாற்று சாதனையை எட்டுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Latest News
கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பொது முகாமையாளர்!
Local
18 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
Local
18 August 2026
வரலாற்றில் முதன்முறையாக போக்குவரத்து ஆணைக்குழுவின் முக்கிய பதவிக்கு பெண்கள்!
Local
18 August 2026
கண்டலம விருந்தகத்துக்குள் புகுந்த காட்டு யானை எனினும் ஆச்சரியம்!
Local
18 August 2026
புதிய விதியின் கீழ், களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முதல் வீரர் நெய்மர்!
Local
18 August 2026
சமித்புர சது ஓமானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு கைது !
Local
18 August 2026
ஃபிஃபாவின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி பதவி விலகினார்!
Local
18 August 2026
இந்தியாவில் UPI (Unified Payments Interface) பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பது தொடர்பில் பரிசீலனை!
Local
18 August 2026
ஃபெராரி நிறுவனத்தின் முதலாவது மின்சார வாகனம் ஏல விற்பனையில் சாதனை!
Local
18 August 2026
பெண் ஒருவருக்கு எதிரான வழக்கில் ட்ரம்ப்பின் மேன்முறையீட்டை மீண்டும் நிராகரித்த நீதிமன்றம்!
Local
18 August 2026