பிரபல அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர்களான 'ஹீரோஸ்' (heroes) மற்றும் 'நாஷ்வில்' (Nashville) ஆகியவற்றில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை ஹேடன் பானெட்டியர் (hayden Panettiere) தனது 36 ஆவது வயதில் காலமானார்.
அவரது மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தென் கரொலைனாவின் கிரீன்வில் பகுதியில் உள்ள இல்லமொன்றில் அவர் சுயநினைவின்றிக் காணப்பட்டதையடுத்து, அவசர மருத்துவக் குழுவினர் முதலுதவி அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
அவரது மரணத்தில் எந்தவித சந்தேகத்திற்கிடமான சூழலோ அல்லது அசம்பாவித அறிகுறிகளோ முதற்கட்ட விசாரணையில் தென்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே அதிகாரப்பூர்வ மரணத்திற்கான காரணம் தெரியவரும்.
"ஹேடன் அளவில்லா அன்பையும் மகிழ்ச்சியையும் வழங்கிய ஒரு பேரொளி" எனக் குறிப்பிட்டு, அவரது தந்தை ஸ்கிப் பானெட்டியர் இந்தத் துயரச் செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய ஹேடன் பல்வேறு திரைப்படத் தொடர்களின் மூலம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
'நாஷ்வில்' தொடரின் நடிப்புக்காக அவர்க்கு கோல்டன் குளோப் விருது பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Latest News
கனடா வேலைவாய்ப்பு விசா காட்டிப் பெருமளவு மோசடி - ஹிரு CIA வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது!
Local
27 August 2026
நேபாள திடீர் வெள்ளப்பெருக்கு : 157 பேர் உயிரிழப்பு, 400-க்கும் அதிகமானோர் மாயம்!
Local
27 August 2026
தனது சாதனைகளை தொடர்ந்து புதுப்பிக்கும் எந்திரன் - இறுதிப் போட்டியிலும் சாதனை!
Local
27 August 2026
கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் வியக்கும் ஒரு விசித்திர சாதனை!
Local
27 August 2026
பாலஸ்தீன நடவடிக்கை (Palestine Action) அமைப்பைத் தீவிரவாத அமைப்பாகப் பெயரிட்டு அமெரிக்கா பொருளாதாரத் தடை!
Local
27 August 2026
கடமை நேரங்களில் சமூக வலைத்தளப் பயன்பாடு தொடர்பில் தொடருந்து ஊழியர்களுக்கு விசேட சுற்றுநிருபம்!
Local
27 August 2026
2032 ஆம் ஆண்டுக்குள் வணிக ரீதியான உற்பத்தியே இலக்கு: இலங்கையின் எண்ணெய் அகழ்வாராய்ச்சிக்கு சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்கும் புதிய திட்டம்!
Local
27 August 2026
செம்மணி குறித்து சுயாதீன விசாரணைக்கு அவுஸ்திரேலியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தல்!
Local
27 August 2026
பிரபல ஹொலிவூட் நடிகர் டிம் கரி காலமானார்
Local
27 August 2026
இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள்
Local
27 August 2026