ஃபெராரி(Ferrari) நிறுவனத்தின் முதலாவது மின்சார வாகனமான 'ஃபெராரி லூஸ்' (Ferrari Luce) ஏலத்தில் 40 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (சுமார் 29.5 மில்லியன் பவுண்டுகள்) விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.
கலிபோர்னியாவில் நடைபெற்ற 'RM Sotheby's' தொண்டு நிறுவன ஏலத்தில், 'ஃபெராரி லூஸ்' வாகனம் 40 மில்லியன் டொலருக்கு விற்பனையானது.
ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட புதிய வாகனம் ஒன்று பெற்ற மிக அதிகபட்ச விலை இதுவாகும்.
இந்த நிதி முழுமையாக ஃபெராரி அரக்கட்டளையின் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு வழங்கப்படும்.
அப்பள் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை வடிவமைப்பாளர் சர் ஜோனி ஐவ் (Sir Jony Ive) மற்றும் அவரது 'LoveFrom' குழுவினரால் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம், கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டபோது கடும் விமர்சனங்களைச் சந்தித்தது.
5 இருக்கைகள், 4 கதவுகள் மற்றும் மின்சார மின்கல அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளதால், இது ஃபெராரியின் பாரம்பரிய அடையாளத்தை இழந்துவிட்டதாகக் விமர்சகர்களும், நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், ஏலம் விடப்பட்ட இந்தச் சிறப்பு பதிப்பு வாகனம், ஒளியின் திசைக்கு ஏற்ப நிறம் மாறும் பிரத்யேக 'Madreperla Semi-Gloss' வெண்மை நிறப் பூச்சு, சிறப்பு சக்கரங்கள் மற்றும் பிரத்யேக உள்கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.
ஆரம்ப கால விமர்சனங்கள் மற்றும் பங்குகளின் தற்காலிக வீழ்ச்சிக்கு மத்தியிலும், சீன சந்தையில் நிலவும் பலமான வரவேற்பு காரணமாக இந்த ஆண்டிற்கான விற்பனை இலக்கை ஃபெராரி நிறுவனம் ஏற்கனவே எட்டியுள்ளது.
Latest News
பிற்பகல் 2 மணிக்குப் பின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் : பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!
Local
10 September 2026
தந்தி வழிப் பணப் பரிமாற்றம்: அமெரிக்க டொலர்ளை வெளிநாடுகளுக்கு அனுப்பியவர் மருதானையில் கைது
Local
10 September 2026
"இன்றைக்கும் தழும்புகள் இருக்கு..." : சட்டப்பேரவைச் சர்ச்சைக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்!
Local
10 September 2026
பொலன்னறுவையில் கோர விபத்து : கால்வாயில் கவிழ்ந்த பேருந்து - 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Local
10 September 2026
நாடலி ஹார்ப் உள்ளிட்ட நெருக்கமான உதவியாளர்களுக்கு பணப்பரிசு வழங்கிய டொனால்ட் ட்ரம்ப்
Local
10 September 2026
மத்திய கிழக்கில் தற்போது என்ன நடக்கிறது? - 3 நிமிடங்களில் சுருக்கமாக!
Local
10 September 2026
களுபோவில வீடொன்றின் மீது கைக்குண்டு வீச்சு!
Local
10 September 2026
பிலிப்பைன்ஸில் கப்பலில் தீப்பரவல்: 5 பேர் உயிரிழப்பு!
Local
10 September 2026
அணுவாயுதம் வைத்திருப்பவர்களும் ஈரானின் நாகரிகத்தை அச்சுறுத்துவோரும் நியாயம் பேச தகுதி அற்றவர்கள் - ஈரான் துணை ஜனாதிபதி கண்டனம்
Local
10 September 2026
நவம்பர் தேர்தலுக்கு பிறகு ஈரானுக்கு எதிரான போர் உடன் முடிவுறும்: மசகு எண்ணெய் விலையும் குறையும் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவிப்பு
Local
10 September 2026