இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சீனப் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக ஸ்திரமான வளர்ச்சியைப் பேணியுள்ளதாக சீன தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சீனப் பொருளாதாரம் தொடர்பான பல்வேறு தரவுகளை வெளியிட்ட அந்த துறை, இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை, 20 மில்லியன் சீன யுவான் அல்லது அதற்கு மேற்பட்ட வருடாந்த வருமானம் கொண்ட தொழில்துறை நிறுவனங்களின் சேர்க்கப்பட்ட மதிப்பு, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த துறை அறிக்கைகள் காட்டுகின்றன.
மேலும், அந்த காலப்பகுதியில் சீனாவின் சேவைத் துறையின் உற்பத்திச் சுட்டெண் 4.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன், 17.3 சதவீத அதிகரிப்பைக் காட்டிய பொருட்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி உற்பத்தி 30,126.4 பில்லியன் சீன யுவான் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், சீனாவின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (CPI) 0.9 சதவீத உயர்வைக்காட்டுகிறது.
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் சீனாவில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மிதமான உயர்வைப் பேணும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest News
பஸ் லலித் 72 மணி நேரம் தடுப்புக் காவலில் விசாரிக்கப்படவுள்ளார்
Local
25 August 2026
திரையில் வில்லன்... நிஜத்தில் ஹீரோ! விளம்பரமில்லாமல் உதவும் நடிகர் ஆனந்தராஜ்
Local
25 August 2026
கெஹெல்பத்தர பத்மேவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
Local
25 August 2026
சுரேஷ் சலேயை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி
Local
25 August 2026
'விசேட மருத்துவ மற்றும் விசேட பல் மருத்துவ சேவை' என்ற புதிய சேவைப் பிரிவை ஸ்தாபிக்க அமைச்சரவை ஒப்புதல்!
Local
25 August 2026
இரத்மலானை வானூர்தி நிலையத்தில் சிறிய ரக வானூர்தி விபத்து
Local
25 August 2026
அடுத்த மாதம் புதிய ஐபோன் வாங்குவோருக்கு அதிர்ச்சித் தகவல் : அப்பிள் நிறுவனம் அதிரடி முடிவு!
Local
25 August 2026
அவுஸ்திரேலிய முதலீட்டு மாநாட்டில் கவனம் ஈர்த்த கொழும்பு துறைமுக நகரம்: சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் இலங்கை!
Local
25 August 2026
சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை இன்றும் நிராகரிப்பு!
Local
25 August 2026
குளிரூட்டப்பட்ட மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய்
Local
25 August 2026