முறையற்ற வகையில் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில், தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையைப் பறிமுதல் செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவல்துறை நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவால் (FCID) தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மாத்தறை பிரதான நீதிபதி சதுர திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் வழக்கில் மூன்றாவது பிரதிவாதியான பசில் ராஜபக்ஷ, நீதிமன்றம் ஏற்கத்தக்க மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பிக்காமல் தொடர்ந்து முன்னிலையாகாமல் இருந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவரது பிணைக்கு பிணையாளர்களாகக் கையொப்பமிட்ட மூவருக்கும் அபராதம் விதித்த நீதிபதி, அதனைச் செலுத்தத் தவறினால் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.
அத்துடன், பசில் ராஜபக்ஷசவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முதலாவது மற்றும் இரண்டாவது பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் முன்னிலையான அதேவேளை, அரசுத் தரப்பில் FCID அதிகாரிகளும், பிரதிவாதிகள் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் டி சில்வா உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவும் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
கண்டியில் மதுபானக் கடைகள் 10 நாட்களுக்கு மூடல்
Local
19 August 2026
அடுத்த படத்திற்கு தயாராகும் சிறுத்தை சிவா: அஜித், தனுஷ் இணைய விருப்பம்
Local
19 August 2026
அதிக வெப்பம் குறித்த எச்சரிக்கை – சுகாதார அமைச்சு வெளியிட்ட முக்கிய வழிகாட்டல்
Local
19 August 2026
மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை - தமிழ்நாடு அரசு தீர்மானம்
Local
19 August 2026
காலி டெஸ்டில் மனோதத்துவ ஆட்டம்: ஜெய்ஸ்வாலின் தூண்டிலில் சிக்கி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்த திக்வெல்ல!
Local
19 August 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிதல் கட்டாயம் - செப்டம்பர் 19ஆம் திகதியுடன் சலுகைக்காலம் நிறைவு
Local
19 August 2026
இந்திய அணியின் பந்து வீச்சில் சுருண்டது இலங்கை!
Local
19 August 2026
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி உயிரிழப்பு
Local
19 August 2026
வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Local
19 August 2026
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிற்றூந்து, ஓட்டுநர், உதவியாளர்: முதலமைச்சர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு
Local
19 August 2026