இலங்கை காவல்துறையின் உதவி சேவையில் உள்ள 383 வெற்றிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் திகதி செப்டம்பர் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 10 ஆம் திகதியிட்ட 2497 ஆம் இலக்க அதிவிசேட அரசிதழ் மூலம் வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பில், விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதியாக ஆகஸ்ட் 14 நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 14 ஆம் திகதியிட்ட 2502 ஆம் இலக்க அரச வர்த்தமாணி அறிவித்தல் மூலம் இந்த காலநீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றிடங்களில் 177 காவல் உதவி ஆய்வாளர் (SI) பதவிகளும், 206 காவலர் (Constable) பதவிகளும் அடங்குகின்றன.
காவல் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கு இணையதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், கணினி அமைப்புப் பகுப்பாய்வு, மென்பொருள்-வன்பொருள், வலையமைப்பு, நிரலாக்கம், தரவு நிர்வாகம், வரைகலை வடிவமைப்பு, அளவு கணக்கெடுப்பு, இயந்திரவியல், உணவு வழங்கல் மற்றும் திட்டமிடல் உள்ளிட்ட பல்துறை சார்ந்த வல்லுநர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.
அதேவேளை, காவலர் பதவிகளுக்கு மேலதிகமாக மருந்தகம், செவிலியப் பணி, மின்சாரப் பணி, மருத்துவ ஆய்வகச் சேவைகள், குளிரூட்டல் மற்றும் காற்றுப் பதனப் பணி, வாகன இயக்கம், கணினி சார்ந்த பணிகள், இயந்திரப் பணி, பற்றவைத்தல், நீச்சல் பயிற்சி, மேடை விளக்குகள், ஒலி நிர்வாகம், ஒப்பனை மற்றும் உடற்பயிற்சிப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு தொழினுட்ப மற்றும் ஆதரவுப் பணிகளுக்காகவும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இணையவழி (Online) மூலமாக மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், நீடிக்கப்பட்ட இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Latest News
அமெரிக்காவும் கனடாவும் வர்த்தக ஒப்பந்தத்துக்கு தயாராகின்றன.
Local
21 August 2026
அல்பேர்ட்டா மாகாணத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அடுத்த 60 நாட்கள்!
Local
21 August 2026
சீனாவில் பொதி செய்யும், தரம் பிரிக்கும் மனித ரோபோக்கள்!
Local
21 August 2026
நைஜீரியாவில் சோகம்: படகு விபத்தில் சிறுவர்கள் உட்பட்ட 40 பேர் பலி!
Local
21 August 2026
தந்தையின் மறைவுக்கு பின்னர், முதல் கோலை பெற்ற மெஸ்ஸி!
Local
21 August 2026
கால்பந்து உலக தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பிராந்திய கூட்டமைப்புகள் ஆலோசனை!
Local
21 August 2026
காஷ்மீர் குறித்து அமெரிக்கத் தூதரின் கருத்து: பாகிஸ்தான் கண்டனம்!
Local
21 August 2026
அமெரிக்காவின் மொத்த தேசியக் கடன் முதல் முறையாக 40 டொலர் டிரில்லியனைக் கடந்தது!
Local
21 August 2026
அமெரிக்காவின் புதிய போர்க்கப்பல் அரபிக்கடலை சென்றடைந்தது!
Local
21 August 2026
நந்தா மாலனியின் மறைவு :மூன்று நாட்கள் தேசிய துக்க தினங்களாக அறிவிப்பு!
Local
20 August 2026