வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 11ஆவது கட்டத்திற்கான மாணவர் சேர்க்கை ஆரம்பமாகியுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023, 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, மூன்று பாடங்களிலும் குறைந்தது சாதாரண சித்தி (S) பெற்ற மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.
விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சை அல்லது சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் குறைந்தது சாதாரண சித்தி (S)பெற்றிருக்க வேண்டும்.
பொதுச் சாதாரணப் பரீட்சையில் குறைந்தபட்சம் 30 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 27ஆம் திகதியளவில் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
பொறியியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், அறிவியல், வர்த்தகம், மானிடவியல் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் 16 அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் 129க்கும் மேற்பட்ட பட்டப்படிப்புத் திட்டங்களை பயில்வதற்கு மாணவர்களுக்கு இதன் மூலம் வாய்ப்பு அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Latest News
கண்டியில் மதுபானக் கடைகள் 10 நாட்களுக்கு மூடல்
Local
19 August 2026
அடுத்த படத்திற்கு தயாராகும் சிறுத்தை சிவா: அஜித், தனுஷ் இணைய விருப்பம்
Local
19 August 2026
அதிக வெப்பம் குறித்த எச்சரிக்கை – சுகாதார அமைச்சு வெளியிட்ட முக்கிய வழிகாட்டல்
Local
19 August 2026
மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் அரச ஊழியர்களுக்கு விசேட சலுகை - தமிழ்நாடு அரசு தீர்மானம்
Local
19 August 2026
காலி டெஸ்டில் மனோதத்துவ ஆட்டம்: ஜெய்ஸ்வாலின் தூண்டிலில் சிக்கி அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்த திக்வெல்ல!
Local
19 August 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி அணிதல் கட்டாயம் - செப்டம்பர் 19ஆம் திகதியுடன் சலுகைக்காலம் நிறைவு
Local
19 August 2026
இந்திய அணியின் பந்து வீச்சில் சுருண்டது இலங்கை!
Local
19 August 2026
முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி உயிரிழப்பு
Local
19 August 2026
வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Local
19 August 2026
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிற்றூந்து, ஓட்டுநர், உதவியாளர்: முதலமைச்சர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு
Local
19 August 2026