General20 August 2026

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை இந்த ஆண்டின் இறுதியில்!

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் டிஜிட்டல் மாற்றத்திற்கான வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் நேற்று (19) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் விரிவாக விளக்கமளித்தனர்.

இதன்போது, டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி ஆய்வு செய்ததுடன், அதற்குத் தேவையான முதற்கட்ட ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அரசாங்கத்தின் பரந்த டிஜிட்டல் பொருளாதார மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்த டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் உட்பட பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes