நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் இதுவரை 37 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த சட்டமூலம் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் நேற்றுமுன்தினம் (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல தரப்பினர் இந்த புதிய அரசியலமைப்புத் திருத்தத்துக்கு பலத்த எதிர்ப்பை வெளியிட்டு வந்த நிலையிலேயே இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதல் நாளான நேற்றுமுன்தினமே, அதனை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய மக்கள் சக்தி, சர்வஜன பலய கட்சி மற்றும் சுயாதீன சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த னுக்களை விசாரிக்க பூரண நீதியரசர்கள் குழாமை நியமிக்குமாறும் பல தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மனுக்களில் 22 ஆவது திருத்தமானது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பினால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்ய மேலும் இரண்டு வார காலம் அவகாசம் உள்ளதோடு, அதன் பின்னர் மூன்று வாரங்களுக்குள் இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News
விழாக்களில் கண்களைப் பாதுகாப்பது தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல்!
Local
22 August 2026
எங்கும், எங்கெங்கும் தி.மு.க.வின் சாதனைகள்தான் – ஸ்டாலின் நெகிழ்ச்சி
Local
22 August 2026
80,000 வேலைவாய்ப்புகள் எங்கே? போர்ட் சிட்டி திட்டம் குறித்து சாணக்கியன் கேள்வி
Local
22 August 2026
நெடுந்தீவு மட்டக் குதிரைகளுக்கு குடிநீர் வழங்கும் இலங்கை கடற்படை!
Local
22 August 2026
விதிமுறை மீறல்: லியோனல் மெஸ்ஸிக்கு அபராதம் விதித்த MLS!
Local
22 August 2026
விக்கெட்டை வீழ்த்திய பின் வீராங்கனை செய்த கொண்டாட்டம் சமூக வலைத்தளங்களில் வைரல்!
Local
22 August 2026
லொத்தர் விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நிதியத்தின் கல்விப் புலமைப்பரிசில் திட்டம்!
Local
22 August 2026
Comeback கொடுப்பதில் நாம் Specialist : ஸ்டாலின் தெரிவிப்பு
Local
22 August 2026
54 வயதில் இரண்டாவது திருமணம் – 39 வயது காதலியை கரம் பிடித்த பிரபல பொலிவுட் நடிகர்
Local
22 August 2026
இலங்கை கடற்பரப்பில் மீன்வளம் சரிவு: நாரா அமைப்பு எச்சரிக்கை!
Local
22 August 2026